அட, டோணியா இப்படி.. சாக்ஷியுடன் சேர்ந்து அடித்த கூத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ
ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒன்டே மற்றும், டி20 தொடர்களை இந்தியா வென்ற நிலையில், மனைவி சாக்ஷியுடன், ஜாலி மூடில் டான்ஸ் ஆடியபடி உள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோணி.
என்னதான் பெரிய தல என்ற போதிலும், குடும்பத்தாரோடு குழைந்தபோல மாறிவிடுவார் டோணி.
சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவர் ஜாலியாக விளையாடிய வீடியோ வெளியாகியிருந்தது. அதே போல தனது செல்ல மகளுடன் அவர் கொஞ்சும் போட்டோக்களும் வெளியாகியிருந்தன.

செம கூத்து
சென்னை விமான நிலையத்தில் அவர் தரையில் படுத்து இருந்த போட்டோவும் பலராலும் ஷேர் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், இப்போது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து அவர் அடித்த ஜாலி கூத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

சிரிப்போ சிரிப்பு
இந்த வீடியோவை ஒரு பெண் ஷூட் செய்துள்ளார். சாக்ஷி அமர்ந்திருக்க அவர் முன்பாக டோணி செமையாக ஆட்டம் போடுகிறார். இதை பார்த்த சாக்ஷியால் சிரிப்பை மறைக்க முடியவில்லை. சத்தம் போட்டு சிரிக்கிறார்.

பிரபுதேவா மாதிரில்லா ஆடுறாரு
சும்மா சொல்லக் கூடாது. டோணி சிறப்பாகவே ஆட்டம் போடுகிறார். அவரது உடல் சொல்லும் படியெல்லாம் வளைகிறது. கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு, அவர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றால் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

நீங்களும் ஆடலாம் பாருங்க
டோணி ஆட்டம்போடும் பாடல் இடம் பெற்ற படம், தேசி பாய்ஸ். 2012ல் ரிலீசான இந்த படத்தில் அக்ஷய்குமார், ஜான் ஆப்ரகாம், தீபாகா படுகோனே மற்றும் சித்ராங்கதா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரோகித் தவான் இசையமைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications