Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி தாளத்திற்கெல்லாம் ஆடும் ஷாம்.. வைரலாகும் வீடியோ!

ராஞ்சி: டோணி செய்வதையே திரும்ப செய்யும் செல்ல நாயின் செய்கை அனைவரையும் கவர்ந்துள்ளது. டோணி வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இருக்கும் இந்திய வீரர்கள் தற்போது டி-20 போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி வீரர்கள் நிறைய குறும்புத்தனங்களில் ஈடுபட்டு இணையத்தில், வைரல் ஆகி வருகின்றனர்.

 Dhoni puts video with his pet dog

ஏற்கனவே ரோஹித் சர்மா அணி வீரர்களை பேட்டி எடுத்த வீடியோ வைரலாகி அனைவராலும் பார்க்கப்பட்டது. பிசிசிஐ ஷேர் செய்திருந்த அந்த வீடியோ இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் டிரெண்ட் ஆனது. ரோஹித் சர்மா ஒருநாள் ரிப்போர்ட்டராக இருக்கும் வீடியோ அது.

இந்த நிலையில் தற்போது டோணி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தனது செல்ல நாய்குட்டியுடன் அவர் விளையாடும் வீடியோ அது. அந்த வீடியோவில் டோணி செய்வதையே அவரது நாயும் திரும்ப செய்கிறது. டோணி செய்யும் அனைத்து அசைவுகளுக்கும் ஏற்ப அவரது நாய் அங்கும் இங்கும் சென்று விளையாடுகிறது.

இந்த நாய்க்குட்டியின் பெயர் ஷாம் என்று தெரியவந்துள்ளது. ராஞ்சியில் இருக்கும் அவரது வீட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அவருக்கு மிகவும் பிடித்த நாய் குட்டியாகும்.

டோனியின் பேஸ்புக் மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் பேஸ்புக் பக்கம் என நிறைய பக்கங்களில் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே இது போல் அவர் பைக் கழுவும் வீடியோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 5, 2017, 17:32 [IST]
Other articles published on Oct 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+