
கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் நடுவேயான மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கிரிக்கெட் தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. முதல் டி20 போட்டி, தர்மஸ்தலாவில் அன்றைய தினம் நடக்கிறது.

பெங்களூரில் பயிற்சி
இந்திய வீரர்களுக்கு, கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி கடந்த சில நாட்களாக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து நடந்து வருகிறது. டோணி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் அதில் பங்கேற்றுள்ளனர்.

சிறப்பு காட்சி
இந்நிலையில், நகரிலுள்ள ஸ்டூடியோ ஒன்றில் கிரிக்கெட் வீரர்களுக்காக, 'கிஸ் கிஸ்கோ ப்யார் கரூன்' திரைப்படம் நேற்றிரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தின் ஹீரோ கபில் ஷர்மா இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பேட்மின்டன் பெண் நட்சத்திரமான சாய்னா நேஹ்வாலும் இதில் பங்கேற்று சினிமா பார்த்து ரசித்தார்.

பிரபல வீரர்கள்
டோணி, சுரேஷ் ரெய்னா, அஜிங்ய ரஹானே, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் படத்தை வெகுவாக ரசித்து பார்த்ததாக தெரிவித்துள்ளனர். சாய்னா நேஹ்வாலும் படத்தை மிகவும் ரசித்ததாக டிவிட் செய்துள்ளார்.

ஞாயிறுடன் பயிற்சி முடிவு
இந்திய வீரர்களின் பயிற்சி காலம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவுபெறுகிறது. அதன்பிறகு அவர்கள் தர்மசலா புறப்பட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











