Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சத்தம் போடாமல் பின்னி எடுக்கும் ரெய்னா.... ப்யூட்டிஃபுல்!

ராஞ்சி: இந்திய அணிக்கு எப்படியோ, ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சத்தம் போடாமல் நல்ல பலமாக இருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா சமர்த்தாக ஆடி வெற்றி தேடித் தந்தார். நேற்று நடந்த 2வது போட்டியிலும் அபாரமாக ஆடி அசத்தினார்.

அதிரடியாக ஆடிய அவர் நேற்று அரை சதம் போட்டதோடு, சென்னை அணியை தூக்கி நிறுத்தவும் செய்தார்.

டக்கு டக்குன்னு ரன் குவிப்பு

டக்கு டக்குன்னு ரன் குவிப்பு

நேற்றைய போட்டியில் முரளி விஜய்யையும், பின்னர் ஹஸ்ஸியையும் இழந்து சென்னைஅணி தடுமாறிய நிலையில் ரெய்னா, டக் டக்கென்று அதி வேகமாக ரன்களைக் குவித்ததால் அணி தடுமாற்றத்திலிருந்து மீண்டது.

விட்ற மாட்டோம்ல...

விட்ற மாட்டோம்ல...

ரெய்னாவின் ஆட்டத்தில் ஒரு உறுதி இருந்தது. ரன் குவிக்காமல் போக மாட்டேன் என்று திடமான நிலையில் அவர் ஆடியது போலவே இருந்தது. அதேபோலத்தான் அவரது அதிரடியிலும் ஒரு பலம் தெரிந்தது.

57 பந்துகளில் 84

57 பந்துகளில் 84

57 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 84 ரன்களைக் குவித்து சென்னையை ஸ்திரப்படுத்தினார்.

டோணிக்கு சற்றும் குறைவில்லை

டோணிக்கு சற்றும் குறைவில்லை

கடைசி நிலையில் டோணி அதிரடியாக ஆடியது போலவே நடுக்களத்தில் ரெய்னா பின்னி எடுத்தார். டோணிக்கு தான் சற்றும் சளைத்தவன் இல்லை என்பது போல அவரது ஆட்டம் அமைந்தது.

23 பந்துகளில் 60 ரன் பார்ட்னர்ஷிப்

23 பந்துகளில் 60 ரன் பார்ட்னர்ஷிப்

டோணியுடன் இணைந்து ரெய்னா 4வது விக்கெட்டுக்கு 60 ரன்களைச் சேர்த்தார். 23 ரன்களில் இது வந்தது.

டோணி வரும் வரை ரெய்னாவின் ரன் மழைதான்

டோணி வரும் வரை ரெய்னாவின் ரன் மழைதான்

டோணி வந்து ஆட்டத்தை தன் பக்கம் திருப்பும் வரையிலும் ரெய்னாதான் பின்னிக் கொண்டிருந்தார். அட்டகாசமான ஸ்டிரோக்குகளால் பந்துகளை நாலாபக்கமும் பறக்க விட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு சிக்ஸர்தான்

ஒரு சிக்ஸர்தான்

இத்தனை ரன் குவித்தும் கூட ரெய்னா ஒரு சிக்ஸர் மட்டுமே விளாசினார். இருப்பினும் கஷ்டமான நிலையில் அணி இருந்தபோது உள்ளே வந்த ரெய்னா, அணியை சிறப்பான இடத்தில் உட்கார வைத்து விட்டுத்தான் பெவிலியன் திரும்பினார்.

Story first published: Friday, September 27, 2013, 12:08 [IST]
Other articles published on Sep 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+