
சாஹல் பவுலிங்
விக்கெட் விழாததால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 6வது ஓவரிலேயே சாஹலை பவுலிங்கில் இறக்கிவிட்டார் கோலி. ஆனால் அதற்கும் பலன் பூஜ்யம் தான் கிடைத்தது. அவரது பந்துகளை ராயும் பேர்ஸ்டோவும் பவுண்டரியும் சிக்ஸருமாக வெளுத்தனர்.

அள்ளிய
ஸ்டெம்புக்கு வெளியே கிட்டத்தட்ட பெரும்பாலான பந்துகளை சாஹல் வீசியது இருவருக்கும் வசதியாக போய்விட்டது. மட்டையை சுழற்றி, சுழற்றி இருவரும் ரன்களை அள்ளிக் கொண்டு வந்தனர். அனைத்து பவுண்டரிகளும் லாங் ஆன் திசையில் தான் பறந்தன. இந்திய அணி ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது அப்பட்டமாக தெரிந்தது.

அப்பீல், வொய்டு
முதல் விக்கெட்டை வீழ்த்த ஹர்திக் பாண்டியா வீசிய 11வது ஓவரில் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஓவரின் 5வது பந்து, ராயின் பேட்டில் பட்டு தோனியின் கைகளுக்குள் புகுந்தது. அனைவரும் அப்பீல் செய்ய, வொய்டு என்று நடுவர் அறிவித்தார்.

ரிவ்யூ மறுத்த தோனி
தோனியிடம் கோலி ரிவ்யூ எடுக்கலாமா என்று கேட்க அவர் மறுத்துவிட்டார். தோனி வேண்டாம் என்று சொல்லியதால் கோலி ரிவியூ எடுக்கவில்லை. ஆனால் அல்ட்ரா எட்ஜில் அந்த பந்து ராயின் கிளவுசில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 50.

முதல் விக்கெட்
அதன்பிறகு, ரன் வேகத்தை அதிகரித்த இந்த ஜோடி எளிதாக 100 ரன்களை தாண்டியது. கிட்டத்தட்ட 110 ரன்கள் கழித்து தான் (அதாவது இங்கிலாந்தின் ஸ்கோர் 160 ஆக இருக்கும் போது) ராய், குல்தீப் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். தோனியின் தவறு... இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications