Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியா? அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்!

மும்பை : விராட் கோலியை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என அப்போதைய கேப்டன் தோனி தேர்வுக் குழுவிடம் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

Recommended Video

Dilip Vengsarkar says Dhoni Did Not Want Kohli to Play For India in 2008

முன்னாள் இந்திய அணி வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவரும் ஆன திலிப் வெங்க்சர்க்கார் இது பற்றி இப்போது பேசி இருக்கிறார்.

முதன் முறையாக விராட் கோலியை இந்திய அணியில் சேர்க்க தான் முயன்ற போது என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக கூறி உள்ளார்.

தமிழக வீரர் தேர்வு

தமிழக வீரர் தேர்வு

கேப்டன் தோனி, விராட் கோலியை மறுத்தது மட்டுமின்றி, அதற்கு பதிலாக தமிழக வீரர் ஒருவரை அணியில் இடம் பெறச் செய்தது பற்றியும், அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எண்ணம் என்னவாக இருந்தது என்பது பற்றியும் கூறி உள்ளார் வெங்க்சர்க்கார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

தற்போது இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக, கேப்டனாக இருக்கிறார் விராட் கோலி. ஆனால், 2008இல் அண்டர் 19 அணியில் சிறப்பாக ஆடி இருந்த அவரை, தோனி அணியில் தேர்வு செய்ய மறுத்தது ஆச்சரியமாக இருக்கலாம்.

அண்டர் 19 உலகக்கோப்பை வெற்றி

அண்டர் 19 உலகக்கோப்பை வெற்றி

2008இல் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு அண்டர் 23 அணியில் இருந்து சில இளம் வீரர்களை அணியில் சேர்க்க முடிவு செய்தது. அந்த சமயத்தில் தான் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இளம் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

திலிப் வெங்க்சர்க்கார் முடிவு

திலிப் வெங்க்சர்க்கார் முடிவு

அந்த அண்டர் 19 அணியின் கேப்டன் விராட் கோலி, சிறப்பாக பேட்டிங் ஆடி பெயர் பெற்று இருந்தார். அதனால், கோலியை இந்திய அணியில் சேர்க்க முடிவு செய்தார் திலிப் வெங்க்சர்க்கார். அவரது முடிவை மற்ற நான்கு தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

விராட் கோலி அப்போதே பேட்டிங் அடிப்படைகளில் சிறந்து விளங்கினார். கேப்டனாகவும் செயல்பட்டு வெற்றி தேடிக் கொடுத்து இருந்தார். இந்தியா அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஆட இருந்ததால், கோலியை இந்த நேரத்தில் சர்வதேச போட்டிகளில் களமிறக்கலாம் என வெங்க்சர்க்கார் கருதியே அவரை தேர்வு செய்ய முயன்றார். விராட் கோலி அப்போதே பேட்டிங் அடிப்படைகளில் சிறந்து விளங்கினார். கேப்டனாகவும் செயல்பட்டு வெற்றி தேடிக் கொடுத்து இருந்தார். இந்தியா அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஆட இருந்ததால், கோலியை இந்த நேரத்தில் சர்வதேச போட்டிகளில் களமிறக்கலாம் என வெங்க்சர்க்கார் கருதியே அவரை தேர்வு செய்ய முயன்றார்.

தோனி மறுப்பு

தோனி மறுப்பு

ஆனால், கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விராட் கோலியை அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்துள்ளனர். அதற்கு காரணமாக, தாங்கள் அவரது பேட்டிங்கை பார்த்ததே இல்லை. எனவே, அதே அணியுடன் களமிறங்கவே திட்டமிட்டுள்ளோம் என் கூறி உள்ளனர்.

தேர்வு செய்ய வேண்டும்

தேர்வு செய்ய வேண்டும்

அதற்கு பதில் அளித்த திலிப் வெங்க்சர்க்கார், "நீங்கள் அவரை பார்த்ததில்லை. ஆனால், நான் அவரை பார்த்து இருக்கிறேன். நாம் இந்த பையனை நிச்சயம் அணியில் தேர்வு செய்ய வேண்டும்" என கூறி சமாதானம் செய்து உள்ளார். இந்த முடிவை பலரும் அப்போது எதிர்த்து உள்ளனர்.

சுப்பிரமணியம் பத்ரிநாத் வேண்டும்

சுப்பிரமணியம் பத்ரிநாத் வேண்டும்

அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மற்றும் கேப்டன் தோனி, விராட் கோலியை அணியில் தேர்வு செய்வதை விரும்பவில்லை என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் இவர்கள் இருவரும் தமிழக கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத்தை அணியில் தேர்வு செய்ய விரும்பி இருக்கிறார்கள்.

இவருக்கு வாய்ப்பு கொடுங்க

இவருக்கு வாய்ப்பு கொடுங்க

அப்போது சுப்பிரமணியம் பத்ரிநாத் உள்ளூர் தொடரில் சிறப்பாக ஆடி நல்ல பார்மில் இருந்தார். அதனால், கோலியை தேர்வு செய்வதை கண்ட பத்ரிநாத்துக்கு தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறி உள்ளார். இந்த தகவல்களை திலிப் வெங்க்சர்க்கார் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

இன்று கோலி நிலை

இன்று கோலி நிலை

அந்த தொடரில் பத்ரிநாத் தான் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி துவக்கத்தில் அணியில் இடம் பெறவே போராடி இருந்தாலும், அதன் பின் தன் திறமையை நிரூபித்து, இன்று உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக வலம் வருகிறார்.

Story first published: Saturday, April 4, 2020, 11:05 [IST]
Other articles published on Apr 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+