For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியை வம்புக்கு இழுத்த ரெய்னா.. கூல் மேனின் கோபமான பதிலடி!

டோணி ஒன்றும் கூல் கேப்டன் இல்லை என்று கூறிய ரெய்னாவுக்கு, டோணி பதில் அளித்து இருக்கிறார்.

By Shyamsundar

டெல்லி: இந்திய முன்னாள் கேப்டன் டோணி எப்படி கூல் கேப்டன் பெயர் பெற்றார் என்று ரெய்னா சில நாட்களுக்கு முன் விளக்கம் அளித்தார். ரெய்னாவின் இந்த பேச்சு டோணி குறித்து பார்வையை வெகுவாக மாற்றி இருந்தது.

அதேபோல் உண்மையாகவே டோணி கூல் கேப்டன்தானா என்பதையும் அவர் விளக்கி இருக்கிறார். ரெய்னாவின் இந்த பேட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது ரெய்னாவிற்கு டோணி பதில் அளித்து குறிக்கிறார். எப்போதும் கோபமாக பேசாத டோணி இந்த முறை கொஞ்சம் கோபமாகவே பதில் அளித்துள்ளார்.

கூல் கேப்டன் டோணி

கூல் கேப்டன் டோணி

இந்திய அணியன் முன்னாள் கேப்டன் டோணி அனைவராலும் 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்பட்டார். டோணி உண்மையாகவே கேப்டன் கூல் தானா என்ற கேள்விக்கு ரெய்னா பதில் அளித்து இருந்தார். அதில் ''டோணி எப்போதும் கேமராவுக்கு முன் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் கண்களில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் டிவியில் இடைவேளை போடும் சமயங்களில் எங்களை நன்றாகவே திட்டுவார். அவருக்கு கோபம் எல்லாம் வரும். அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது '' என்று கூறினார்

டோணி சொன்னது

டோணி சொன்னது

இந்த நிலையில் ரெய்னாவின் இந்த கருத்துக்கு டோணி பதில் அளித்துள்ளார். அதில் "என்னால் எப்போதும் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும். விளையாடுவது கிரிக்கெட்டாக இருந்தாலும் இது மிகவும் சீரியஸாக விஷயம். இது ஒன்றும் விளையாட்டுதனமான விஷயம் இல்லை. அப்படி இருக்கும் போது யாராவது தவறு செய்தால் கோபம் வரத்தான் செய்யும்'' என்று கூறியுள்ளார்.

உண்மை என்ன

உண்மை என்ன

மேலும் அவர் தன்னை குறித்த இன்னொரு உண்மையையும் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார். அதில் ''நான் அதற்காக எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டேன். டிரெஸ்ஸிங் ரூமில் என்னைப் போல ஒரு காமெடியான நபரை பார்க்க முடியாது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மட்டும்தான் நான் இது போல கோபப்படுவேன்'' என்று ரெய்னாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.

டிவிட்டர் பத்திக்கிச்சு

இந்த நிலையில் ஏற்கனவே ரெய்னாவின் கூல் கேப்டன் கருத்து டிவிட்டர் முழுக்க விவாதிக்கப்பட்டது. தற்போது அதற்கு டோணி கூறிய பதிலும் விவாதம் ஆகியுள்ளது. அதில் இவர் ''டோணியை கூல் கேப்டன் இல்லை என்று கூறிய ரெய்னாவுக்கு, டோணி தன்னுடைய பாணியிலேயே சூப்பராக பதில் அளித்துள்ளார்'' என்று சந்தோசமாக

கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 29, 2017, 9:45 [IST]
Other articles published on Nov 29, 2017
English summary
Indian skipper Raina explains how Dhoni maintains his cool image in Tv. He says that, Dhoni was not really a cool captain. Dhoni replies to Raina's cool captain statement in his own way.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+