Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது போதும் சார் எங்களுக்கு.. சிஎஸ்கே வெளியிட்ட தோனி, ரெய்னா வீடியோ.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்

சென்னை : ஆகஸ்ட் 15 அன்று தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

Recommended Video

Dhoni's emotional retirement video on Instagram

இதையடுத்து தோனி, சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மனமுடைந்தனர். பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் உணர்ச்சிகளை கொட்டி வந்தனர்.

இந்த நிலையில், சிஎஸ்கே அணி அவர்களை ஆறுதலாக ஒரு வீடியோவை வெளியிட்டது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள நிலையில் இந்தியாவில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஆகஸ்ட் 14 அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் ஆறு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவே முன்னதாக சென்னை வந்துள்ளனர்.

ரெய்னா வெளியிட்ட புகைப்படம்

ரெய்னா வெளியிட்ட புகைப்படம்

சுரேஷ் ரெய்னா, தோனி, தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா ஆகியோர் ஒரே தனி விமானத்தில் சென்னை வந்தனர். சுரேஷ் ரெய்னா, தோனி மற்றும் பிற வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

ரசிகர்கள் கொண்டாடினர்

ரசிகர்கள் கொண்டாடினர்

அப்போது தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் இப்படி ஒரே நாளில் ஓய்வை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்போது சிஎஸ்கே அணி ஒன்று கூடியதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆகஸ்ட் 15 அன்று தோனி உள்ளிட்ட அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை துவக்கினர்.

ஓய்வு அறிவிப்புகள்

ஓய்வு அறிவிப்புகள்

அன்றைய தினம் இரவு 7.29 மணிக்கு தோனி திடீரென தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7.29 மணியில் இருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள் என கூறி அதிர வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் உங்கள் பயணத்தில் நானும் இணைகிறேன் என சுரேஷ் ரெய்னாவும் அவருடன் இணைந்தார்.

உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்

உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்

இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் இதயம் நொறுங்கி விட்டதாகவும், கண்ணீரை அடக்க முடியவில்லை என்றும் பதிவிட்டு வந்தனர். இதனால், சமூக வலைதளங்கள் ஒரே சோகமயமாக இருந்தது. ஒரே ஆறுதலாக இருந்தது சிஎஸ்கே மட்டுமே.

சிஎஸ்கே வீடியோ

சிஎஸ்கே வீடியோ

தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ஆடுவார்கள் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. கவலையில் இருந்த ரசிகர்களை சாந்தப்படுத்த சிஎஸ்கே அணி ட்விட்டரில் தோனி, ரெய்னா இருவரும் பிற சிஎஸ்கே அணியினரை சந்திக்கும் வீடியோவை வெளியிட்டது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மார்ச் மாதம் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் இருந்து பிரிந்து சென்ற சிஎஸ்கே வீரர்கள் மீண்டும் பயிற்சிக்காக ஒன்று கூடி இருப்பதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அந்த வீடியோ காட்சியை தான் வெளியிட்டு இருந்தது சிஎஸ்கே அணி.

மனதுக்கு ஆறுதல்

மனதுக்கு ஆறுதல்

இதைக் கண்ட ரசிகர்கள் பலர் இதற்கும் கண் கலங்கும், இதயம் நொறுங்கும் ஈமோஜிக்களை பதிவிட்டு இருந்தாலும், சிலர் இது போன்ற வீடியோக்களை அடிக்கடி போட்டால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என சிஎஸ்கே அணியிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஐபிஎல் திட்டம்

ஐபிஎல் திட்டம்

சிஎஸ்கே அணி ஆகஸ்ட் 21 அன்று ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் செல்ல உள்ளது. அதற்கு முன் ஆறு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்கள் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனையும் செய்து கொள்ள உள்ளனர்.

Story first published: Sunday, August 16, 2020, 16:26 [IST]
Other articles published on Aug 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+