Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிறைவேறாத ஆசை.. 2020ஐ புரட்டி போட்ட அந்த வார்த்தை.. தோனி இப்படி சொல்வார் என யாரும் நினைக்கவே இல்லை!

சென்னை: 2020ல் கிரிக்கெட் உலகை அதிர வைத்த விஷயங்களில் தோனியின் ஓய்வும் முக்கியமான ஒன்றாகும்.

2020ம் வருடம் கிரிக்கெட் உலகிற்கு மிகவும் முக்கியமான வருடம் ஆகும். கொரோனா காரணமாக மொத்தமாக உலகமே ஸ்தம்பித்து நிலையில், கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. 4 -5 மாதங்கள் கழித்து புதிய விதிமுறைகளுடன் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.

சுணங்கிப் போய் இருந்த கிரிக்கெட் போட்டிகளை ஐபிஎல் தொடர்தான் புதிய உயரத்திற்கு மீண்டும் கொண்டு சென்றது. தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.

எப்படி

எப்படி

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காமல் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி தனது ஓய்வை அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தனது ஓய்வை தோனி அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 7.29 மணி அளவில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துவிட்டு விடைபெற்றார்.

விடைபெற்றார்

விடைபெற்றார்

2020ல் பல சோகமான விஷ்யங்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து இருந்த மக்களுக்கு தோனியின் ஓய்வு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. மிக சாதாரணமாக ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டில் தனது ஓய்வை தோனி அறிவித்து கிரிக்கெட் உலகையே உலுக்கினார். தோனி இப்படி சாதாரணமாக ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றெல்லாம் யாருமே நினைக்கவில்லை.

பேர்வெல்

பேர்வெல்

ஒரு பேர்வெல் மேட்ச் கூட இல்லாமல் தோனி ஓய்வு பெற்றது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. தோனியின் முடிவிற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது. ஓய்விற்கு முன் இவர் தொடர்ந்து 12 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் தோனி விளையாடினார். அதன்பின் கொரோனா காரணமாக இந்த வருடம் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. வருட தொடக்கத்தில் நடந்த போட்டியில் தோனி கலந்து கொள்ளவில்லை.

மோசம்

மோசம்

கொரோனா பாதிப்பு காரணமாக எல்லா போட்டியும் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தோனிஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அவர் இந்த வருடம் நடக்க இருந்த டி 20 உலகக் கோப்பையில் கலந்து கொண்டு கோப்பை வென்ற பின் ஓய்வு பெறலாம் என்று இருந்தார். ஆனால் கொரோனா காரணமாக இந்த கோப்பை அடுத்த வருடம் ஒத்திவைக்கப்பட்டது.

 ஆசை

ஆசை

அடுத்த வருடம் வரை தோனி பொறுத்திருக்க முடியாது. இதனால் ஐசிசி டி 20 கோப்பையை மீண்டும் கைப்பற்றும் நிறைவேறாத கனவுடன் தோனி ஓய்வு பெற்றார். ஆனாலும் இவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார். அடுத்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் தோனி சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து களமிறங்குவார்.

Story first published: Sunday, December 13, 2020, 17:25 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+