Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் முதல் காதலி யார் தெரியுமா... கிரிக்கெட்டை தவிர!

Recommended Video

தோனியின் முதல் காதலி யார் தெரியுமா...?- வீடியோ

ஜெய்ப்பூர்: கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டைத் தவிர தன்னை முதல் முதலில் ஈர்த்த பெண் யார் என்பதை கூறியுள்ளார். அது அவருடைய மனைவி சாக் ஷி இல்லை. அவரை சந்திப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தோனியை ஒரு பெண் ஈர்த்துள்ளார்.

கேப்டன் கூல், தல, கிரேட் பினிஷனரான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் போட்டிகளில் கலக்கி கொண்டிருக்கிறது. 36 வயதாகும் தோனி, தன்னுடைய சொந்த வாழ்க்கை, தன்னுடைய குடும்பத்தை பற்றி வெளிப்படையாக எதையும் பேசியது கிடையாது.

Dhoni reveals his first crunch

நீண்டகாலமாக அவருடைய முதல் காதல் குறித்து பலர் கேள்வி கேட்டும், வெறும் புன்னகை அல்லது அதிகபட்சம் சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்து வந்துள்ளார்.

ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. உங்களை முதல் முதலில் கவர்ந்த பெண் யார் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். தோனி வழக்கம்போல், கேப்டன் கூலாக பதில் சொல்லாமல் இருந்தார். மீண்டும் மீண்டும் கேட்டபோது, அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, நீங்கள் கெஸ் பண்ணுங்க என்றார். பலரும், பல பெயர்களை கூறினர்.

கடைசியில், ஸ்வாதி என்ற பெயரை சொன்னபோது, அதுதான் என்று தோனி கூறியுள்ளார். 1999ல் ராஞ்சியில் பிளஸ் 2 படித்தபோது, அந்தப் பெண்ணை சந்தித்ததாகவும் தோனி கூறினார்.

பின்னர் அந்த பெண் இந்தக் கூட்டத்திலேயே இருப்பதாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அனைவரும் சுற்றித் தேடியபோது, விளையாட்டுக்கு சொன்னதாக தோனி கூறி சிரித்தார். பின்னர், நான் சொன்ன இந்த ரகசியத்தை என்னுடைய மனைவி சாக் ஷியிடம் யாரும் சொல்லிடாதீங்க என்னும் தோனி கூறினார்.

Story first published: Wednesday, May 9, 2018, 15:36 [IST]
Other articles published on May 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+