Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே.. வெளியான “ஒப்பந்த” ரகசியம்!

Recommended Video

Dhoni Retirement : தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே- வீடியோ

தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே.. வெளியான "ஒப்பந்த" ரகசியம்!

மும்பை : தோனி தன் ஓய்வு முடிவை அடுத்த ஓராண்டிற்கு தள்ளி வைத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் என ஒரு செய்தி பிசிசிஐ வட்டாரத்தில் வலம் வருகிறது.

2019 உலகக்கோப்பை தொடரில் தோனி தன் சராசரிக்கு இணையாக ரன் குவித்து இருந்தாலும், அவர் பேட்டிங் செய்யும் போது தடுமாறினார் என பரவலாக விமர்சனம் செய்யப்பட்டது.

பரவிய வதந்தி

பரவிய வதந்தி

அதற்கு முன்பு இருந்தே, தோனி உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்பட்ட நிலையில், உலகக்கோப்பை தொடரில் அவர் மீது விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது. அதனால், தோனி ஓய்வு பெறப் போகிறார் என்ற வதந்தி மிக வேகமாக பரவியது.

தோனி ஓய்வு இல்லை

தோனி ஓய்வு இல்லை

ஆனால், தோனி தரப்பில் யாரும் அவர் ஓய்வு குறித்து பேசவில்லை. தோனியின் முடிவு என்ன என்பது கேப்டன் கோலி முதல் பிசிசிஐ வரை யாருக்கும் தெரியவில்லை. எனவே, தோனி இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என கூறப்படுகிறது.

அணியில் இடம் உண்டா?

அணியில் இடம் உண்டா?

தோனி தொடர்ந்து கிரிக்கெட் ஆட விரும்பினாலும், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என சிலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இளைய தலைமுறை வீரர்களை இப்போது இருந்து அணியில் சேர்த்து பயிற்சி அளித்தால் தான் அடுத்த உலகக்கோப்பை தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என பிசிசிஐ தரப்பில் சிந்தித்து வருகிறார்கள்.

சிஎஸ்கே ஒப்பந்தம்

சிஎஸ்கே ஒப்பந்தம்

ஆனால், தோனி ஏன் தன் ஓய்வு முடிவை தள்ளிப் போட்டு இருக்கிறார் என்பது குறித்து பிசிசிஐயில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தோனி ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் செய்து கொண்டுள்ள மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்கிறார்கள்.

என்ன ஒப்பந்தம்?

என்ன ஒப்பந்தம்?

கடந்த 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி தடையில் இருந்து மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது. அப்போது தோனியுடன் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டது. இது அனைத்து வீரர்களுக்கும் பொதுவான ஒப்பந்தம் தான். அதன்படி தோனி 2018 முதல் 2020 ஐபிஎல் தொடர் வரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும்.

சிஎஸ்கே உறுதி

சிஎஸ்கே உறுதி

ஒருவேளை தோனி வெளியேற விரும்பினால் வெளியேறலாம். எனினும், தோனி - சிஎஸ்கே அணி இடையே பலமான பந்தம் இருப்பதால் தோனி 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் நிச்சயம் ஆடுவார் என்கிறது சிஎஸ்கே நிர்வாகம். அதனால் தான் தன் சர்வதேச கிரிக்கெட் ஓய்வை தோனி தள்ளிப் போட்டு வருகிறார் என்கிறார்கள். அனேகமாக, 2020 ஐபிஎல் தொடருக்கு பின் தோனி தன் ஓய்வை அறிவிக்கலாம்.

Story first published: Wednesday, July 17, 2019, 11:33 [IST]
Other articles published on Jul 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+