இப்ப தோனியோட பெரிய ஆசை என்ன தெரியுமா? தோனியின் நெருங்கிய நண்பர் கூறுகிறார்

கிரிக்கெட் பயணத்தின் தோனியின் மிகப் பெரிய ஆசை எது? அவரது நெருங்கிய நண்பர் கூறுகிறார்- வீடியோ

ஜார்கண்ட் : இப்போது தோனியின் பெரிய ஆசை என்ன என்பது பற்றி அவர் நண்பர் ஒரு தகவலை கூறி உள்ளார்.

தோனி கிட்டத்தட்ட தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.

இந்த நிலையில் தோனி தற்போது தன் கிரிக்கெட் பயணத்தின் மிகப் பெரிய ஆசையாக இதைத்தான் வைத்துள்ளார் என அவரது நண்பரும், விளம்பர நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸ்-இன் இயக்குனருமான அருண் பாண்டே ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

இதுதான் ஒரே ஆசை

இதுதான் ஒரே ஆசை

அருண் பாண்டே கூறியது இது தான். "ஒருநாள் போட்டிகளில் தன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது இருந்து தோனியின் ஒரே கனவு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவது தான். அதில் அணியின் ஆலோசகராகவும் இருப்பார் தோனி" என கூறி உள்ளார்.

விட்டுக் கொடுத்தார் தோனி

விட்டுக் கொடுத்தார் தோனி

மேலும், "அவர் கோலிக்கு நேரம் கொடுத்து கேப்டன் பதவியில் வளர இடம் அளித்தார். அவரது எண்ணத்தில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை" என கூறினார் பாண்டே. தோனி தான் கேப்டன் பதவியை கோலிக்கு விட்டுக் கொடுத்தார் என்பது போல கூறியுள்ளார் அருண் பாண்டே.

டி20 அணியில் இருந்து நீக்கம்

டி20 அணியில் இருந்து நீக்கம்

தோனி சில காலமாக ஒருநாள் போட்டிகளில் ரன் குவிப்பதில்லை. எனினும், விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார். 2020 டி20 உலகக்கோப்பை வரை தோனி அணியில் நீடிக்க மாட்டார் என்பதை அடுத்து அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தோனிக்கு அழுத்தம்

தோனிக்கு அழுத்தம்

இந்த சூழ்நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக வளர்ந்து வருகிறார். டெஸ்ட் அணியில் ஏற்கனவே விக்கெட் கீப்பர் இடத்தை ஓரளவு தக்க வைத்து விட்டார். அடுத்து டி20 மற்றும் ஒருநாள் அணியிலும் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். இது தோனிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், தோனி 2019 உலகக்கோப்பை வரை ஆடுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Dhoni’s biggest dream is to play 2019 World Cup says his friend
    Story first published: Saturday, November 17, 2018, 12:38 [IST]
    Other articles published on Nov 17, 2018
    POLLS

    myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more