டோணி அடித்த உக்கிரமான ஷாட்.. கொஞ்சம் விட்டா உயிரே போய் இருக்கும்.. லோகேஷ் ராகுல் பகீர்!
கட்டாக்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள 'பாரப்பட்டி' மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
இதில் அதிரடியாக ஆடிய இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதில் டோணி அடித்த ஷாட் ஒன்று மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. எதிரில் நின்ற லோகேஷ் ராகுல் கொஞ்சம் சுதாரிக்காமல் இருந்திருந்தால் பெரிய அளவில் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கும்.

அதிரடி மன்னன் டோணி
நேற்று நடந்த டி-20 போட்டியில் டோணி மிகவும் அதிரடியாக ஆடினார். பினிஷிங் மன்னன் என்று பெயர் பெற்று இருக்கும் டோணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியின் இலக்கை 180ஆக உயர்த்தினார். இதன் மூலம் இந்திய பேட்டிங் ஆர்டரில் 4ம் இடத்தில் இறங்க எப்போதும் சிறந்த தேர்வு டோணிதான் என்பதை அவர் இன்னொருமுறை நிரூபித்து இருக்கிறார்.

புதிய சாதனை
இந்த போட்டியில் நேற்று டோணி இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் அவர் ஏ.பி. டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்து இருக்கிறார். டிவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக இதுவரை டி-20ல் 72 விக்கெட்டுக்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது டோணி அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். இவர் மொத்தம் 84 போட்டிகளில் 74 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.
டோணியின் ஷாட்
டோணி இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த போது வித்தியாசமான ஷாட் ஒன்று அடித்தார். நேராக சென்ற அந்த பந்து லோகேஷ் ராகுல் மீது அடிக்கும் வகையில் சென்றது. கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ராகுல் வேகமாக எகிறிக் குதித்தார். இதனால் பந்து அவரை தாக்காமல் சென்றது. மிகச்சிறிய இடைவெளியில் அவர் மோசமான தாக்குதலில் இருந்து தப்பினார்.

உயிரே போய் இருக்கும்
இந்த ஷாட்டில் இருந்து தப்பித்தது குறித்து லோகேஷ் ராகுல் பேசியுள்ளார். அதில் ''அந்த பந்து மிக வேகமாக என்னை தாக்கும் வகையில் வந்தது. கொஞ்சம் விட்டு இருந்தால் என் உயிரே போய் இருக்கும். என்னை டோணி கிட்டத்தட்ட கொன்றேவிட்டார். எப்படியோ தப்பித்துவிட்டேன்'' என்று காமெடியாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications