Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மின்னல் உசேன் போல்டுக்கு சவால் விடும் டோணி

டெல்லி: எதிரணிகளை ஓட ஓட விரட்டும் தற்போதைய இந்திய அணியின் வயதில் மூத்த வீரரான கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, ரன்களுக்காக ஓடுவதில் உசேன் போல்டுக்கு சவால் விடுக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாக யோ-யோ டெஸ்ட் எனப்படும் ஒரு வீரர் எவ்வளவு வேகமாக ஓடுகிறார் போன்றவை கணக்கிடப்படுகிறது. அணியின் தற்போதைய உடல்தகுதி நிபுணர் சங்கர் பாசுவின் இந்த முறை மிகவும் கடினமாகும்.

Dhoni’s Bolt Avatar

இந்த டெஸ்ட் எல்லாம் எனக்கு ஜூஜூபி என்று வேகத்தில் மிரட்டுகிறார், 36 வயதாகும் கேப்டன் கூல் டோணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இரண்டாவது டி-20 போட்டியின்போது, ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்களை எடுத்து அசத்தினார் டோணி.

அவர் எப்போது கிரீசுக்கு வந்தார், எப்போது மறுபுறம் சென்றார் என்ற வீடியோவை ஸ்லோமோஷனில் பார்த்தாலே வேகத்தில் மிரட்டுகிறார்.

அவர் மணிக்கு, 31 கி.மீ., வேகத்தில் ஓடினார். அவருக்கு எதிர்புறத்தில் இருந்த கேதார் ஜாதவ் மணிக்கு 25 கி.மீ., வேகத்தில், அதுவும் டோணியின் வேகத்தை ஈடுகொடுக்க முயன்று ஓடினார். டோணியின் வேகத்துக்கு இளம் வீரர்களே ஈடுகொடுக்க முடியவில்லை.

அதெல்லாம் சரி, உசேன் போல்டுக்கு எப்படி சவால் கொடுக்கிறார் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம். உலகின் மின்னல் மனிதர் உசேன் போல்ட், அதிகபட்சமாக மணிக்கு, 44 கி.மீ., வேகத்தில் ஓடியுள்ளார்.

கூட்டிக் கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.

Story first published: Saturday, October 14, 2017, 10:52 [IST]
Other articles published on Oct 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+