டாட்டா பைபை.. தோனிக்கெல்லாம் டீம்ல இடம் இல்லை.. காரணம் இவங்க தான்.. சேவாக் அதிரடி!
டெல்லி : தோனி இந்திய அணிக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், முன்னாள் வீரர் சேவாக், அது குறித்து தன் கருத்தை அதிரடியாக கூறி இருக்கிறார்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் சிறப்பாக ஆடி வரும் நிலையில், தோனிக்கு அணியில் இடம் இல்லை என சேவாக் அதிரடியாக கூறி உள்ளார்.
மேலும், இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்தும், கேப்டன் கோலியின் பார்ம் அவுட் குறித்தும் விரிவாக பேசி இருக்கிறார் சேவாக்.

தோனி நிலை
இந்திய அணியின் மூத்த வீரர் தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என பேசப்பட்ட நிலையில், அவர் இதுவரை ஓய்வை அறிவிக்கவில்லை. அதே சமயம், இந்திய அணியிலும் இடம் பெறவில்லை. பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் அவர் பெயர் நீக்கப்பட்டது.

ரிஷப் பண்ட்
அவருக்கு மாற்றாக அணியில் இடம் பிடித்தார் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். அவரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எனினும், அவர் தொடர்ந்து அணியில் இடம் பெற்று வருகிறார். சமீபத்தில் அவரது பேட்டிங் சற்று முன்னேறி வருகிறது.

கேஎல் ராகுல்
ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக, பேட்ஸ்மேன் ஆக மட்டுமே இருந்த ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தி அதில் நல்ல பலனைக் கண்ட கேப்டன் கோலி, தொடர்ந்து டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் நம்பிக்கை
இந்த இரண்டு வீரர்களை தாண்டி தான் தோனி இந்திய அணியில் இடம் பெற முடியும் என்ற நிலையே இப்போது உள்ளது. இந்த நிலையில், தோனி ஐபிஎல் தொடரை அதிகம் நம்பி இருக்கிறார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சேவாக் கருத்து
இந்த நிலையில் தான் தோனி மீண்டும் இந்திய அணிக்கு வருவது கடினம். தேர்வுக் குழுவினர் தோனியை தாண்டி வந்து விட்டதாகவும், அவருக்கு மாற்று வீரர்களை அடையாளம் கண்டு விட்டதாகவும் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் சேவாக்.

இரண்டு வீரர்கள்
மேலும் அவர் கூறுகையில், "தோனி அணியில் எங்கே பொருந்துகிறார்? ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஏற்கனவே அணியில் நல்ல பார்மில் இருக்கும் நிலையில், அதிலும் ராகுல் மிக மிக சிறப்பாக ஆடி வரும் நிலையில், அவர்களை மட்டுமே நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது?" என கேள்வி எழுப்பினார்.

நியூசிலாந்து தோல்விகள்
சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், நியூசிலாந்து யானோ ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நம்மை விட சிறப்பாக ஆடியது என்றும், டி20 போட்டிகளில் கூட வெற்றிக்கு அருகே வந்ததாகவும் குறிப்பிட்டார்.

கோலி பார்ம் அவுட்
அடுத்து கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து தொடரில் மிக மோசமான பார்மில் இருந்த நிலையில், அனைத்து சிறந்த பேட்ஸ்மேன்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சச்சின், ஸ்டீவ் வாஹ், ஜேக்கஸ் காலிஸ், ரிக்கி பாண்டிங் என அனைவரும் இந்த நிலைக்கு ஆளாகி உள்ளனர் என்றும் கூறினார்.

ஹர்திக் பண்டியா
சமீபத்தில் ஹர்திக் பண்டியா காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பினார். அது இந்திய அணிக்கு பெரிய மாற்றத்தை அளிக்கும் எனவும், அணியின் சமநிலையை இது மாற்றி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் சேவாக்.


Click it and Unblock the Notifications