Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இருக்காரு… கவலையே இல்ல…. உலக கோப்பை இந்தியாவுக்கு தான்… கணித்து சொல்லும் முன்னாள் ஜாம்பவான்

Recommended Video

உலக கோப்பை இந்தியாவுக்கு தான்: கணித்து சொல்லும் கவாஸ்கர்

மும்பை: இந்திய கிரிக்கெட் உலகிற்கு தோனி ஆற்றிய பங்கு மகத்தானது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும் என்று முன்னணி வீரர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். மேலும் அதில் தோனியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படிப்பட்ட கீப்பிங்

எப்படிப்பட்ட கீப்பிங்

தோனி குறித்து சுனில் கவாஸ்கர் மேலும் கூறியதாவது: தோனியின் கீப்பிங் எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். கண் சிமிட்டும் நேரத்தில் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி விடுகிறார்.

தோனி கைதேர்ந்தவர்

தோனி கைதேர்ந்தவர்

அதே போல் கடைசி கட்டங்களில் பீல்டிங்கில் வீரர்களை சரியான இடத்தில் வைப்பதில் தோனி கைதேர்ந்தவர். இது பல போட்டிகளில் கோலிக்கு உதவி இருக்கிறது. உலக கோப்பையிலும் அது தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

யார் அந்த 3 பேர்?

யார் அந்த 3 பேர்?

இந்திய அணியில் சிறந்த மூன்று பேர் உள்ளனர். ஒருவேளை அவர்களால் சரியாக ஆட முடியாத நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார்.

சுமையை குறைத்தார்

சுமையை குறைத்தார்

2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது தோனி இந்திய அணியை வழி நடத்தினார். அணியினர் மீது இருக்கும் சுமையை எல்லாம் குறைத்து அணியை வெற்றி பெற செய்தார்.

மகத்தான பங்கு

மகத்தான பங்கு

ஆகவே, தோனி போன்று ஒருவர் இந்த அணியில் இருப்பது மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கும். ஒட்டு மொத்தத்தில் உலக கோப்பையில் தோனியின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்றார்.

Story first published: Friday, May 3, 2019, 11:20 [IST]
Other articles published on May 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+