Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் புனே... என்னதான் இருந்தாலும், அந்த "மஞ்சாக் கலரு" மாதிரி இல்லை மச்சா..!

சென்னை: என்னதான் இருந்தாலும், அந்த மஞ்சக் கலரு மாதிரி இல்லை மச்சா.. இதுதான் டோணியின் புதிய ஐபிஎல் சீருடையைப் பார்த்து டோணி ரசிகர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணியின் சொந்தங்கள் கூடு விட்டு கூடு மாறி விட்டன.

டோணி, அஸ்வின் உள்ளிட்டோர் புனே அணிக்கும், சுரெஷ் ரெய்னா, மெக்ல்லம், ஜடேஜா ஆகியோர் ராஜ்கோட் அணிக்கும் மாறிப் போய் விட்டனர். எதிரும் புதிருமாக மோதவுள்ளனர்.

சென்னை சென்டிமென்ட்

சென்னை சென்டிமென்ட்

சீதை இருக்கும் இடமே ராமனுக்கு அயோத்தி என்பார்கள். அதேபோல டோணி இருக்கும் இடமே சென்னை ரசிகர்களின் ஆதரவும் இருக்கும். அந்த வகையில் தற்போது சென்னை ரசிகர்கள் மனதளவில் புனே ரசிகர்களாக மாறி விட்டனர்.

சீருடையும் மாறிப் போச்சு

சீருடையும் மாறிப் போச்சு

இதுவரை சென்னை அணியின் மஞ்சள் நிற சீருடையில் டோணி உள்ளிட்டோரைப் பார்த்து வந்த ரசிகர்கள் இனிமேல் புதிய உடையில், புதிய கலரில் டோணியைப் பார்க்கப் போகிறார்கள்.

சீருடை அறிமுகம்

சீருடை அறிமுகம்

புனே அணியின் புதிய சீருடை அறிமுகமாகியுள்ளது. இதில் டோணி கலந்து கொண்டார். அப்போது சென்னை அணி குறித்தும் அவர் உருக்கமாக நினைவு கூர்ந்தார்.

மஞ்சள் சூரியன்

மஞ்சள் சூரியன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியபோது அட்டகாசமான மஞ்சள் நிற சீருடையில் டோணி அன் கோ ஆடி வந்தது. பார்க்கவே பளிச்சென இருந்தது அந்த சீருடை.

கலர் கலர் ஜிங்குச்சா

கலர் கலர் ஜிங்குச்சா

தற்போது அவர்கள் புனே அணிக்காக அணியப் போகும் சீருடை வித்தியாசமாக உள்ளது. 4 விதமான வண்ணத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மஞ்சளும் இருக்கு பாஸ்!

ஆனால் மஞ்சளும் இருக்கு பாஸ்!

அதேசமயம், இந்த உடையில் மஞ்சள் கலரையும் மறக்காமல் சேர்த்துள்ளனர். காலர் பகுதியிலும் சட்டையின் இடது பகுதியிலும் மஞ்சள் நிறத்தையும் சேர்த்துள்ளனர். இது சென்டிமென்ட்டாக சேர்த்தார்களா என்று தெரியவில்லை.

புச்சா இருக்கும் பாக்கவே!

புச்சா இருக்கும் பாக்கவே!

எப்படியோ மஞ்சள் நிற சீருடையில் சூரியன் போல தகதகத்த டோணியையும், அஸ்வினையும், இதர சென்னை வீரர்களையும் இந்த புதிய சீருடையில் பார்ப்பது ரொம்பவே வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.

இவங்கல்லாம் இனி புனே மச்சான்ஸ்!

இவங்கல்லாம் இனி புனே மச்சான்ஸ்!

டோணி, அஸ்வின் தவிர புனே அணியில் இடம் பெற்றுள்ள சில முக்கிய வீரர்கள் - ரஹானே, ஸ்டீவன் ஸ்மித், பாப் டு பிளஸிஸ் ஆகியோர். ஸ்டீபன் பிளமிங்தான் இந்த அணிக்கும் பயிற்சியாளராகியுள்ளார்.

Story first published: Tuesday, February 16, 2016, 18:56 [IST]
Other articles published on Feb 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+