VIDEO :'ஒத்த சொல்லால' பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஸிவா..! இணையத்தில் வைரல் வீடியோ
சென்னை:தோனியின் செல்ல மகள் ஸிவா... ஒத்த சொல்லால என்ற தமிழ் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் கடந்த 23-ம் தேதி சென்னையில் தொடங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டியைக் காண்பதற்காக தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தனர். போட்டியை அவர்கள் அரங்கத்தில் இருந்த மற்ற ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர்.

தமிழ் பாடல்
போட்டியின் இடையே மைதானத்தில் தமிழ் பாடல் ஒலிபரப்பானது. தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் இருந்து ஒத்த சொல்லால பாடல் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது.
எழுந்து ஆடிய ஸிவா
அந்த பாடலைக் கேட்டதும் தோனியின் செல்ல மகள் ஸிவா, தன்னை அறியாமல் எழுந்து ஆடத்தொடங்கினார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

குழு பகிர்வு
ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு ஸிவா ஆடி வீடியோவை அவரது ரசிகர்கள் குழு பகிர்ந்துள்ளனர். அந்த பதிவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் லைக் கொடுத்துள்ளார்.

வைரலான வீடியோ
ஜி.வி. பிரகாஷை போன்று இசையமைப்பாளர் அனிருத்தும் அந்த வீடியோவை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆலுமா டோலுமா பாடலுக்கும் அவர் நடனமாடி உள்ளார். தோனியின் மகள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications