வைரல்: 6 மொழிகளில் பேசி அசத்திய க்யூட் ஸிவா தோனி... இணையத்தில் கலக்கல்
Recommended Video

மும்பை:தமது செல்ல மகளுடன் ஆறு மொழிகளில் தோனி பேசி அசத்திய வீடியோதான் இன்றைய கிரிக்கெட் உலகின் வைரல் வீடியோ. கொஞ்ச நஞ்சமல்ல.. தாறுமாறாக இணையத்தை கலக்கி வருகிறது.
தல தோனி யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். அப்படியே பேசினாலும் நறுக்கான வார்த்தைகள் தான். பதில் பேசக்கூடாது என்று நினைத்தால் அவ்வளவுதான். என்ன நடந்தாலும் பேசமாட்டார்.
அதற்கு சமீபத்திய உதாரணம்... ரோர் ஆப் தி லயன் படத்தில் அவர் பேசிய பிக்கெஸ்ட் க்ரைம் என்ற வசனமே சாட்சி. அந்த வசனம் கிரிக்கெட் உலகில் ஏக ஹிட்.

வீடியோ பதிவுகள்
அதேபோல.. கிரிக்கெட் போட்டிகளின் போது தமது மகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோ பதிவுகளை வெளியிட்டு கலக்குவார். தோனி சமூக வலை தளங்களில் அவ்வளவு தொடர்ச்சியாக பதிவுகளை பதிவிடுபவர் அல்ல. ஆனால் தனது மகள் ஸிவாவின் பதிவுகளை தவறாமல் பதிவிடுவார்.

தோனியின் மகள்
சமீபத்தில் தோனி பதிவிட்ட ஸிவாவின் அனைத்து வீடியோக்களும் இணைய வைரல் தான். அதேபோன்ற ஒரு வீடியோவைதான் தான் தற்போது அப்டேட் செய்துள்ளார் தோனி.
நல்லா இருக்கேன்
அந்த வீடியோவில், தோனி தனது மகள் ஸிவா தோனியிடம், "எப்படி இருக்கீங்க?" என்று கேட்கிறார். அதற்கு மழலை குரலில் "நல்லா இருக்கேன்" என ஸிவா பதிலளிக்கிறார்.

6 மொழிகளில் அசத்தல்
மேலும், 6 மொழிகளில் தோனி தனது மகளிடம் கேள்வி கேட்க தொடங்குகிறார். அதற்கு அவரது மகள் க்யூட்டாக அந்தந்த மொழிகளில் பதில் சொல்லி அசத்துகிறார்.

இணையத்தில் வைரல்
ஐபிஎல் போட்டிகளுக்கிடையே, மகளுடன் மொழிப் பயிற்சி என பதிவிட்டுள்ள தோனியின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல். கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் ஆகவும் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications