Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பனிசூழ்ந்த இடம்... அவளது திறமையை வெளிகொணர்கிறது -வீடியோ பகிர்ந்த தோனி

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய 'தல'

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய 'தல'

சர்வதேச அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கிரிக்கெட் வீரராக இருந்து வருபவர் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. கடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியுற்று வெளியேறியதிலிருந்து அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.

மறுபிரவேசத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

மறுபிரவேசத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ள நிலையில், இந்திய அணியில் அவரது மறுபிரவேசம் குறித்த செய்திக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நின்றால், நடந்தால் செய்திதான்

நின்றால், நடந்தால் செய்திதான்

தோனியை அவரது மகள் ஸிவா மிஞ்சி வருகிறார். அவர் எதை செய்தாலும் அது டிரெண்டாகி விடுகிறது. தோனியும் ஸிவா செய்யும் விருப்பத்திற்குரிய செயல்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட தவறுவதில்லை.

கிடார் வாசித்து அசத்தல்

இந்நிலையில் உத்தராகண்டிற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள தோனி, தன்னுடைய மகளுடன் உற்சாகமாக விடுமுறையை செலவிட்டு வருகிறார். இதனிடையே, ஸிவா பாடி, கிடார் வாசித்ததை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திறமையை வெளிக்கொணர்ந்த சூழல்

திறமையை வெளிக்கொணர்ந்த சூழல்

பனிபடர்ந்த சூழல் ஸிவாவின் திறனை வெளிக்கொண்டு வந்துள்ளதாக இந்த வீடியோவிற்கு கேப்ஷனையும் தோனி போட்டுள்ளார்.

20 லட்சம் பேர் லைக்

20 லட்சம் பேர் லைக்

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் வீடியோ பதிவிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஏராளமானோர் கமெண்ட்டுகளையும் ஷேர்களையும் செய்துள்ளனர்.

Story first published: Monday, January 6, 2020, 15:37 [IST]
Other articles published on Jan 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+