For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை அவ்வளவு லேசுல எடை போடாதீங்க.. அவரு ரொம்ப முக்கியமானவரு.. உண்மையை சொல்லும் முன்னாள் கேப்டன்

கேன்பரா:தோனியின் முக்கியத்துவத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடரை 3-2 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது. தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இருந்து தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.

ஆனால், தனக்கு வழங்கிய வாய்ப்பை ரிஷப் பந்த் சரியாக பயன்படுத்தவில்லை. கடைசி இரண்டு போட்டிகளில் தோற்று தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது மிக முக்கியமான காரணமாகும்.

ISL 2019 : ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் புரட்சி.. வெல்லப் போவது யார்?ISL 2019 : ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் புரட்சி.. வெல்லப் போவது யார்?

ஆஸி.க்கு கோப்பை

ஆஸி.க்கு கோப்பை

இதன் மூலம், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பரும் யாரும் இல்லை, மாற்று பேட்ஸ்மேனும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதன் விளைவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு... இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது.

முக்கியத்துவம்

இந்நிலையில், மிடில் ஆர்டர் பிரிவில் தோனியின் முக்கியத்துவத்தை குறித்து யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தோனியின் விளையாட்டு

தோனியின் விளையாட்டு

முன்னதாக, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற தோனியின் ஆட்டம் காரணமாக இருந்தது. அந்தப் போட்டியில் தவான், ரோகித் ஷர்மா, கோலி, அம்பதி ராயுடு சொதப்பினாலும், தோனி மிடில் ஆர்டர்டில் கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

ஆலோசனை

ஆலோசனை

இந்த ஆண்டில் இதுவரை ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி நான்கு அரைசதம் உட்பட 327 ரன்களை குவித்துள்ளார். எனவே, அவரது அனுபவம், ஆலோசனை மற்றும் வழிநடத்துதல் அணிக்கு அவசியம் என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, March 15, 2019, 10:06 [IST]
Other articles published on Mar 15, 2019
English summary
Dhoni's experience important for India, says Michael Clarke.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X