Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு பெறுவது எப்போது...? பேஸ்புக்கில் தோனி வெளியிட்ட அந்த தகவல்..? குஷியில் ரசிகர்கள்

மும்பை: ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இது சரியான நேரம் அல்ல என்று தோனி கூறியிருப்பதாக வெளியான பேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் மூத்த வீரர் தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், தோனியோ அது பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை. இதுவரை எந்த கருத்தும் அவர் சொல்லவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக கூறியுள்ள தோனி, அடுத்த 2 மாதங்கள் ராணுவத்தினருடன் இணைந்து நேரத்தை செலவிட இருப்பதாக கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை.

இடம்பெற வில்லை

இடம்பெற வில்லை

2 மாதங்கள் அவர் தனது பாராமிலிட்டரி பிரிவுடன் பணியாற்றுவதற்காகவே இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. இந்த முடிவு குறித்து தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் கேப்டன் விராட் கோலிக்கு தெரிவிக்கப் படும் என்றும் தோனி தெரிவித்துள்ளார்.

தோனி பேஸ்புக்

தோனி பேஸ்புக்

இந்நிலையில் அவரது பெயரில் இருக்கும் பேஸ்புக் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உலக கோப்பை அரையிறுதியில் தோற்றதால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பதை அறிவேன்.

அணியில் விலக மாட்டேன்

அணியில் விலக மாட்டேன்

எனது ஓய்வு பற்றிய செய்திகளும், தகவல்களும் அதிகளவு விவாதிக்கப் படுகிறது. அணியை விட்டு விலக இது உகந்த நேரமல்ல என்பதால் ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆஸ்திரேலியாவில் அடுத் த ஆண்டு நடக்கும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவேன். தொடர்ந்து ஆதரவளிங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்விகள்

கேள்விகள்

ஆனால் இந்த பதிவு குறித்து பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்தன. தோனியே எழுதியிருப்பது போல இருக்கும் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. புளு டிக்குடன் வந்திருக்கும் பதிவு என்பதால் உண்மை தான் என்று பலர் நம்பினர்.

போலி, ஏமாற்றம்

போலி, ஏமாற்றம்

ஆனால், அது தோனி ரசிகர்கள் போலியாக உருவாக்கிய பதிவு என்றும் அது உண்மையானது அல்ல என்றும் தெரிய வந்துள்ளது. அதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் நிம்மதி அடைந்தாலும், ஏமாற்றமும் அடைந்தனர்.

பாலிதான் முத்திரை

பாலிதான் முத்திரை

முன்னதாக 2011ம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2015 ஆண்டு தோனி பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியை மேற்கொண்டதோடு, உலக கோப்பையில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் கையுறையில் பாலிதான் முத்திரையை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 21, 2019, 12:27 [IST]
Other articles published on Jul 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+