மீண்டும் நீளமாக முடி.. பெண் போல நடனம்.. தல டோணியின் வித்தியாசமான வீடியோ!
Recommended Video

டெல்லி: டோணி நீளமாக முடி வைத்துக் கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
இந்த வீடியோவில் அவருடன் பெண் ஒருவரும் நடனம் ஆடுகிறார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
டோணி நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இப்படி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதில் மிகவும் காமெடியாக நடனம் ஆடியுள்ளார்.

நீளம்
டோணி இந்திய அணியில் அறிமுகம் ஆன போது நீளமாக முடி வைத்து இருந்தார். அவருடைய டிரேட் மார்க் ஸ்டைலுக்கு பலரும் அடிமையாகி இருந்தார்கள். இந்த நிலையில் முதல் ஐசிசி உலகக் கோப்பை டி-20யில் வெற்றிபெற்றதால் தன்னுடைய முடியை மொத்தமாக வெட்டினார்.

மீண்டும்
ஆனால் அதன்பின் அவர் மீண்டும் முடி வளர்க்கவில்லை. தற்போது இந்த வீடியோவில் அவர் நீளமான முடியுடன் காணப்படுகிறார்கள். ஹாலிவுட் வரலாற்று பட ஹீரோக்கள் வைத்து இருப்பது போல நீளமான முடி வைத்து இருக்கிறார்.

போலி முடி
ஆனாலும் அது போலி முடியாகும். அதேபோல் அவர் பெண் போல உடை அணிந்துள்ளார். அவருக்கு அருகில் இருக்கும் பெண்ணும் அவரைப் போலவே உடை அணிந்து இருக்கிறார்.
வீடியோ
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. முத்தரப்பு போட்டியில் இருந்து டோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications