Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை இதுனால தான் எல்லாருக்கும் பிடிச்சுருக்கு.. அந்த புன்னகையில் ஒரு உண்மை இருக்கு!!

Recommended Video

சிறுவனிடம் பேசி கொண்டிருக்கும் தோனி: வைரலாகும் வீடியோ

சென்னை : தோனியை ஏன் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கிறது?

அவர் இப்போது சரியாக பேட்டிங் செய்வதில்லை. டி20 அணியில் இருந்து நீக்கபட்டு விட்டார். இருந்தாலும், இன்னும் ஏன் ரசிகர்கள் தோனியை விட மறுக்கிறார்கள்?

தோனி கிட்ட அப்படி என்ன தான் இருக்கு? அவரிடம் என்ன இருக்கிறது, எதற்காக தோனியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.

தோனியின் குட்டி ரசிகர்

தோனி காரில் பயணித்துக் கொண்டு இருந்த போது, கார் நின்ற இடத்தில் தன்னை சந்திக்க வந்த குட்டி ரசிகரை அழைத்துப் பேசியதோடு, கை குலுக்கி புன்னகையுடன் அனுப்பி வைத்தார். இதில் அப்படி என்ன இருக்கிறது? எல்லா பிரபலங்களும் செய்வது தானே?

உண்மை இருக்கு

உண்மை இருக்கு

தோனி அந்த குட்டி ரசிகரிடம் பேசும் போதும், பின்னர் கைகுலுக்கி அனுப்பும் போதும் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அந்த புன்னகையில் எந்த போலித் தன்மையும் இல்லை. மேலும், அந்த குட்டி ரசிகருடன் சில நொடிகள் பேசி விட்டு தான் வழியனுப்பி வைத்தார். சில பிரபலங்கள் தங்களை சந்திக்க வரும் ரசிகர்களிடம் போலியாக புன்னகைப்பார்கள். ஆனால், தோனியின் முகம் இயல்பாக, உண்மையாக இருந்தது.

குழந்தை மனசு தோனி

இதே போல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற பின் வீரர்கள் தங்கி இருந்த அறையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது. அப்போது சின்னக் குழந்தை போல தோனி பலூன்களை ரோஹித் சர்மாவின் காதருகே வெடித்தார். ரோஹித் சர்மா பயந்து போனதை பார்த்து குழந்தை போல சிரித்துக் கொண்டிருந்தார் தோனி.

இது தான் நம்ம தோனி

இது தான் நம்ம தோனி

தோனியை டி20 அணியில் இருந்து தூக்கி விட்டார்கள். ஊடகங்கள் எல்லாவற்றிலும் கடும் விமர்சனம் வருகிறது. இது எதை பற்றியும் தோனி கவலைப்பட்டதாக தெரியவில்லை. அது தான் நம் "கேப்டன் கூல்" தோனி.

Story first published: Wednesday, November 14, 2018, 16:38 [IST]
Other articles published on Nov 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+