Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இது லிஸ்டலயே இல்லையே”.. தோனியின் ‘ஃபங்கி’ லுக்.. ஐபிஎல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

ராஞ்சி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சினிமா ஹீரோக்களை போன்று காட்சியளிக்கும் புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

Recommended Video

வெளியானது IPL-ன் புதிய விளம்பரம்.. வைரலாக Dhoni -ன் Funky look

இந்திய கிரிக்கெட் அணியில் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத வீரர், எம்.எஸ்.தோனி. இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தோனியின் ஃபினிஷிங், ஹெலிகாப்டர் ஷாட், கீப்பிங்கினை தாண்டி அவரின் ஹேர்ஸ்டைல் லுக்கிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நீளமான முடி

நீளமான முடி

தோனியின் ஹேர்ஸ்டைலை பார்த்து அதே போன்ற ஹேர்ஸ்டைல்கள் வேண்டும் என முடித்திருத்துபவர்களிடம் அடம்பிடிக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர். ஏனென்றால் அவர் அந்த அளவிற்கு தனது முடி அலங்காரத்தில் முக்கியத்துவம் கொடுப்பார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, நீண்ட முடியுடன் தோற்றமளித்தார். அந்த ஹேர்ஸ்டைல் அப்போது செம வைரலானதால், அதே ஹேர் ஸ்டைலைத்தான் அடுத்த பல ஆண்டுகளுக்கு அவர் வைத்திருந்தார்.

தனி கவனம் பெறும்

தனி கவனம் பெறும்

அதன்பின்னர் தனது முடியை ஷார்ட்டாக வெட்டி, ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கும், ஒவ்வொரு ஹேர்ஸ்டைல் என வித்தியாசம் காட்டி வருகிறார். போட்டிகளின் போது அவரின் முடியும் அந்த அளவிற்கு கவனிக்கப்படும். அந்தவகையில் சமீபத்தில் தோனி முறுக்கு மீசையுடன் இருப்பது போன்றும், பின்னர் ஸ்மார்ட்டாக ஸ்பைக் விட்டது போன்று வைத்திருந்த ஹேர்ஸ்டைல்கள் இணையத்தில் வைரலானது.

புது ஹேர்ஸ்டைல்

புது ஹேர்ஸ்டைல்

இந்நிலையில் தற்போது அவர் புதிய ஹேர்ஸ்டைல் ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. தலையின் இரு பக்கங்களிலும் ஷார்டாக வெட்டிக்கொண்டு, முடிக்கு கலரிங் செய்து ( Funky look) காட்சியளிக்கிறார். இதுமட்டுமல்லாமல் அவரின் உடைகளும் திரைப்பட ஹீரோக்களை போன்று உள்ளது. இந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஐபிஎல் தொடருக்காக தோனி ஸ்பெஷலாக ஒரு விருந்து விரைவில் தரப்போகிறார் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது ஐபிஎல் தொடருக்காக தோனி நடித்துள்ள விளம்பர பாடல் வெளியாகும் எனத் தெரிகிறது.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

எம்.எஸ்.தோனி சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த போது விளம்பர படப்பிடிப்பில் ஒன்றில் கலந்துக்கொண்டார். அந்த நேரத்தில் பீஸ்ட் திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை அவர் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வைரலானது. ஒருவேளை சென்னையில் எடுக்கப்பட்ட விளம்பரப்படம் இதுவாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

Story first published: Friday, August 20, 2021, 17:37 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+