Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் புது கெட்டப்பில் தோனி..!! இப்போ, எங்கே என்ன செய்கிறார்..? வெளியான வைரல் போட்டோ

மும்பை: புதுவித ஹேர்ஸ்டைலுடன் காட்சியளிக்கும் தோனியின் போட்டோ தான் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஹைலைட்.

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் அது தல தோனி. அமைதி, துல்லிய முடிவு என பல கட்டங்களில அவரது திறமையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு காலத்தில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமாக வலம் வந்த தோனி, பிறகு அதை மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு காலகட்டத்தில் தமது ஸ்டைலை மாற்றிக் கொண்டே வந்தார். அவரின் தற்போதைய லேட்டஸ்ட் கெட்டப் தான் இந்திய கிரிக்கெட்டின் ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சி மேற்கொண்டார். தென் ஆப்ரிக்க டி 20 போட்டியிலும் அவர் இல்லை. தோனி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

விளம்பர போட்டோ

விளம்பர போட்டோ

அதற்கான பதிலும் இப்போது கிடைத்திருக்கிறது. தற்போது ஸ்மார்ட்டான லுக்கில் தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இடம் பிடிக்காத டோனி தற்போது விளம்பர படத்தில் நடித்து வருகிறார்.

வைரலான புகைப்படம்

பிரபல ஆடை நிறுவன விளம்பரம் ஒன்றில் நடிக்கிறார் தோனி. தற்போது அவரின் அந்த விளம்பர புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சக்கை போடு போடுகிறது. அந்த போட்டோவை அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

அழுத்தம் அதிகரிக்கும்

அழுத்தம் அதிகரிக்கும்

அடுத்து வரும் தொடர்களில் தோனி இடம்பிடிக்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும், அது எந்தளவுக்கு வெற்றியை தரும் என்று தெரியாது. தேர்வுக் குழு எடுக்கும் முடிவு தோனியின் ஓய்வு முடிவின் அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் என்பது தான் இப்போதுள்ள உண்மை.

Story first published: Tuesday, September 10, 2019, 13:27 [IST]
Other articles published on Sep 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+