Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா இந்த போட்டோல இருக்குறது? தல என்ன கோலம் இது? அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்!

ராஞ்சி : சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தோனியின் தற்போதைய தோற்றம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Dhoni’s new white beard look is trending

தோனி அந்த வீடியோவில் இருக்கும் பகுதியை புகைப்படமாக எடுத்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

தோனி சற்றே அதிக வெள்ளை தாடியுடன் அந்த புகைப்படத்தில் காட்சி தருகிறார். பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சில தீவிர தோனி ரசிகர்கள் இதையும் கொண்டாடி வருகிறார்கள்.

தோனி நிலை

தோனி நிலை

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட் ஆடவில்லை. ஆனாலும், அவர் மீதான ரசிகர்களின் மோகம் எள்ளளவும் குறையவில்லை. தோனி அடுத்து எப்போது கிரிக்கெட் ஆடுவார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடரில் தோனி ஆட இருந்தார். அதற்காக தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், தோனி மீண்டும் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

புகைப்படங்கள், வீடியோக்கள்

புகைப்படங்கள், வீடியோக்கள்

தோனி கிரிக்கெட் ஆடியே பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், அவ்வப்போது தோனியின் குடும்பத்தினர், நண்பர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகும்.

ஸிவா வீடியோ

ஸிவா வீடியோ

சமீபத்தில் மகள் ஸிவா மற்றும் செல்ல நாயுடன் தோனி விளையாடும் வீடியோ வெளியானது. மிகச் சில வினாடிகளே கொண்ட அந்த வீடியோவில் தோனியின் தோற்றம் தெளிவாக தெரியவில்லை. பெரும்பாலும் ஸிவாவே அந்த விடியோவில் தோன்றினார்.

தோனியின் புதிய தோற்றம்

தோனியின் புதிய தோற்றம்

தோனியின் புதிய தோற்றம் அந்த வீடியோவில் ஒரு வினாடி மட்டுமே வருகிறது. அதை புகைப்படமாக எடுத்து பரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.அந்த புகைப்படத்தில் தோனி அதிக தாடியுடன் காட்சி தருகிறார். அவருக்கு வெள்ளை தாடி என்பதால் பார்க்க வயதான தோற்றத்தில் இருக்கிறார்.

சால்ட் அன்ட் பெப்பர் தோனி

சால்ட் அன்ட் பெப்பர் தோனி

தோனி அவ்வப்போது இந்திய அணிக்கு ஆடும் போது லேசான வெள்ளை தாடியுடன் "சால்ட் அன்ட் பெப்பர் லுக்"கில் காட்சி தருவார். அது ஸ்டைலாக இருக்கும். அதே போல, ஒரு முறை விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் கொஞ்சம் அதிக தாடியுடன் ஆடி இருந்தார்.

அதிர்ச்சி ஆனாலும் சூப்பர்

அதிர்ச்சி ஆனாலும் சூப்பர்

ஆனால், அந்த தோற்றங்களை விட தற்போது நீள தாடியுடன் காட்சி தருகிறார். தோனி ரசிகர்கள் முதல் முறை பார்க்கும் போது சற்று அதிர்ச்சி அடைந்தாலும், பலரும் தோனி சூப்பராக இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

நீளமான தாடி

நீளமான தாடி

தற்போது கொரோனா வைரஸ் லாக் டவுனில் இருக்கும் நிலையில், பெரிய தாடியுடன் வலம் வருகிறார். லாக்டவுன் நேரத்தில் பலரும் நீளமான தாடியுடன் உள்ளனர். இதை கிண்டல் செய்து பல மீம்ஸ்களும் வெளியாகி வருகின்றன.

Story first published: Saturday, May 9, 2020, 14:52 [IST]
Other articles published on May 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+