அடுத்த குறி இது தான்.. தோனி எடுத்த அதிரடி முடிவு.. கசிந்த தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

Dhoni’s next plan in Indian cricket revealed by sources

ராஞ்சி : தோனி மீண்டும் கிரிக்கெட் ஆடுவாரா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. இந்த முறை ராஞ்சியில் தோனிக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

தோனி மீண்டும் இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆட உள்ளதாகவும் அதற்காக பயிற்சி பெற தோனி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எப்போது இந்திய அணியில் இணைந்து ஆடுவார் என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது.

தோனி ஓய்வு வதந்தி

தோனி ஓய்வு வதந்தி

2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி ஓய்வு பெற உள்ளதாக வதந்திகள் உலா வந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தோனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக இருந்து வருகிறது.

நீண்ட விடுப்பு

நீண்ட விடுப்பு

உலகக்கோப்பைக்கு பின் இந்தியா பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்களில் இருந்து தோனி விடுப்பு எடுத்துக் கொண்டதாக பிசிசிஐ வட்டாரம் தகவல் அளித்தது. ஏன் அந்த விடுப்பு என்பதும் புரியாத புதிராகவே இருந்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சிலர் தோனியை இனி அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள். அதனால் தான் ஒதுங்கி இருக்கிறார் என்றார்கள். இடையே தோனிக்கு உலகக்கோப்பை தொடரில் கையில் காயம் ஏற்பட்டது. அது தான் விடுப்புக்கு காரணம் என்றார்கள்.

கங்குலி முடிவு

கங்குலி முடிவு

இதற்கிடையே புதிதாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி, தான் பதவியேற்ற மறுநாள் நடக்கும் அணித் தேர்வின் போது தோனியிடம் அவரது அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து கேட்டறிவேன் என்று கூறி அதிர வைத்தார்.

கசிந்த தகவல்

கசிந்த தகவல்

இந்த நிலையில் ராஞ்சியில் தோனிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதன் படி தோனி ராஞ்சி மாநில கிரிக்கெட் ஒன்றுடன் இணைந்து விரைவில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்டர் 23 அணியுடன் பயிற்சி

ஜார்கண்ட் மாநில அணியுடன் தோனி பயிற்சி செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால், சீனியர் அணி சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆட வெளி மாநிலத்திற்கு செல்ல உள்ளதால், ஜார்கண்ட் அண்டர் 23 அணியுடன் தோனி பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்.

ஜனவரி முதல் கிரிக்கெட்

ஜனவரி முதல் கிரிக்கெட்

தனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்ட பின்னரே இந்திய அணியில் இணைந்து ஆட வேண்டும் என நினைக்கும் தோனி, பயிற்சிக்குப் பின்னர் ஜனவரி மாதம் முதல் இந்திய அணியில் இணைந்து போட்டிகளில் பங்கேற்பார் என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

தோனி உறுதி

தோனி உறுதி

தோனி கிரிக்கெட் ஆடவே மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த செய்தி அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. தோனி நிச்சயம் இந்திய அணியில் மீண்டும் இணைய திட்டமிட்டுள்ளார் என்பது தெரிகிறது. கங்குலி, தோனியிடம் பேசும் போது அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.

ஐபிஎல் ஆடுவார்

ஐபிஎல் ஆடுவார்

ஜனவரி மாதம் இந்திய அணிக்கு திரும்பும் தோனி தொடர்ந்து ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பார். தோனி தொடர்ந்து கிரிக்கெட் ஆடும் பட்சத்தில் அவரது எதிர்கால திட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கு குறி?

டி20 உலகக்கோப்பைக்கு குறி?

தோனி 2020 டி20 உலகக்கோப்பை தொடர் வரை அணியில் ஆடுவார் என ஊகம் எழுந்துள்ளது. இதையும் கங்குலி தான் உறுதிப்படுத்த வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni’s next plan in Indian cricket revealed by sources. The media reports says Dhoni will train with Jharkand Under 23 team.
Story first published: Thursday, October 24, 2019, 15:38 [IST]
Other articles published on Oct 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X