Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் அடுத்தகட்ட திட்டம் இது தான்.. கசிந்த தகவல்.. கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

Recommended Video

Dhoni Retirement Plan | தோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!-வீடியோ

மும்பை : மூத்த கிரிக்கெட் வீரர் தோனி மீண்டும் இரண்டு மாத காலம் ஓய்வில் செல்ல இருப்பதாகவும், அதனால் இந்திய அணியில் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அதை மேலும் நீட்டித்து இருக்கிறார் தோனி.

இந்த செய்தி மும்பை மிரர் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன.

உலகக்கோப்பையில் தோனி

உலகக்கோப்பையில் தோனி

2019 உலகக்கோப்பை தொடரில் தோனி ரன் குவித்தாலும், நிதானமாக ஆடுகிறார், பேட்டிங் செய்ய தடுமாறுகிறார் என்ற புகார் எழுந்தது. இந்திய அணியும் அரையிறுதியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

ஓய்வு வதந்திகள்

ஓய்வு வதந்திகள்

அடுத்து தோனி ஒய்வு பெறப் போவதாக வதந்திகள் வரத் துவங்கின. ரசிகர்கள் தோனி ஓய்வு பெறக் கூடாது என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கோரிக்கை வைத்து வந்தனர். தோனி ஓய்வு குறித்து வாய் திறக்கவில்லை.

இரண்டு மாத விடுப்பு

இரண்டு மாத விடுப்பு

எனினும், இந்திய அணியில் இருந்து ஒதுங்கினார். இரண்டு மாத காலம் விடுப்பு எடுத்துக் கொண்டார். அதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரில் அவரை அணியில் சேர்க்கவில்லை.

மீண்டும் நீட்டிப்பு

மீண்டும் நீட்டிப்பு

அவரது இரண்டு மாத கால விடுப்பு இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், அதை மேலும் இரண்டு மாதத்திற்கு நீட்டித்து இருக்கிறார். அதன்படி, வரும் நவம்பர் மாதம் வரை தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.

இரண்டு தொடர்களில் இல்லை

இரண்டு தொடர்களில் இல்லை

இந்த இரண்டு மாத காலத்தில் இந்திய வீரர்கள் பலரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரிலும், அதன் பின் நடக்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க உள்ளனர். அந்த இரு தொடர்களிலும் தோனி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இதனால் தோனி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். தோனி முதலில் ஓய்வு எடுத்துக் கொண்ட போது இராணுவத்தில் பனி புரிய ஒய்வு எடுத்தார் என சமாதானம் செய்து கொண்ட அவர்கள், இப்போது மேலும் விடுப்பை நீட்டித்ததால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இந்திய அணி தடுமாற்றம்

இந்திய அணி தடுமாற்றம்

ரசிகர்களின் கவலைக்கு இன்னொரு காரணமும் உள்ளது. தோனியின் விடுப்பு செய்தி வந்த அடுத்த சில மணி நேரங்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. அதனால், தோனி இருந்திருந்தால் இந்தியா தோற்று இருக்காது என ட்விட்டரில் புலம்பி வருகின்றனர்.

ரிஷப் பண்ட் சரியில்லை

ரிஷப் பண்ட் சரியில்லை

மறுபுறம், தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பொறுப்பேற்ற ரிஷப் பண்ட் மிக மோசமாக சொதப்பி வருகிறார். அவருக்கு மாற்றாக வேறு இளம் விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தோனியை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர் தோனி ரசிகர்கள்.

விக்கெட் கீப்பர் வரலாறு

விக்கெட் கீப்பர் வரலாறு

மேலும், பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை இந்திய அணியில் விக்கெட் கீப்பராக பயன்படுத்திப் பார்த்து தோல்வி அடைந்த நிலையில் தான் தோனி இந்திய அணியில் இடம் பிடித்து முன்னணி விக்கெட் கீப்பராக வலம் வந்தார்.

ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் வேதனை

தற்போது தோனி இல்லாத நிலையில், இந்திய அணி தடுமாறி வருகிறது. ரிஷப் பண்ட் சரியாக ஆடவில்லை. இன்னும் எத்தனை விக்கெட் கீப்பர்கள் வந்தாலும் இன்னொரு தோனி கிடைக்கமாட்டார் என்றும் கூறி தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Monday, September 23, 2019, 12:06 [IST]
Other articles published on Sep 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+