தனி ஒருவன் டோணி... இந்திய அணியின் 'பேட்மேன்'... இனியும் அவர் ரிட்டையர் ஆகணுமா பாஸ்?
தர்மசாலா: கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் டோணி எப்போது ஓய்வு பெறுவார் என்று பலரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
டோணி முன்பு போல சரியாக ஆடுவதில்லை என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதன் காரணமாக டோணி மீது அதிக அழுத்தம் வைக்கப்பட்டது. முன்னாள் வீரர்கள் மொத்தமாக டோணிக்கு எதிராக படையெடுத்தனர்.

கலக்கிய டோணி
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் வீரர் டோணி மட்டும்தான். அவர் சரியாக ஆடினாலும் ஆடவில்லை என்றாலும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இன்றைய ஒருநாள் போட்டியில் எல்லா வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகும் போது டோணி மட்டும் தனியாக 65 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனத்திற்கும் பதில் அளித்து இருக்கிறார். தற்போது இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எப்ப தெரியுமா
இதில் இவர் டோணி ஓய்வு அடையும் நாள் குறித்து எழுதியுள்ளார். அதில் ''நீங்கள் ஒவ்வொரு முறையும் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்கும் போது அவர் தனது பேட்டிங் மூலம் பதில் சொல்வார். கண்டிப்பாக அவர் 2019 உலகக் கோப்பை வரையாவது விளையாடுவார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய அணியின் பேட்மேன்
இவர் டோணியை ''அவர் இந்திய கிரிக்கெட்டின் ஆபத்பாந்தவன். கிரிக்கெட் உலகின் பேட்மேன். இன்னொருமுறை அவர் இந்திய அணியை காப்பற்றிவிட்டார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
டோணியின் ரிவ்யூ
இந்த நிலையில் டோணி இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். ஒருமுறை புவனேஷ்வர்குமாருக்கு அம்பயர் தவறாக அவுட் கொடுக்க கை தூக்க முயலும் போதே டோணி ரிவ்யூ கேட்டுவிட்டார். டோணியின் இந்த வேகத்தை இணையமே பாராட்டிக் கொண்டு இருக்கிறது.
மஹேந்திர பாகுபலி
இந்த நிலையில் பாகுபலி படத்தை வைத்து இந்த மீம் போடப்பட்டு இருக்கிறது. அதில் ''டோணி 13 வருடமாக இந்திய அணியை பலவருடமாக அவமானங்களில் இருந்து காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹல்க் டோணி
இந்த டிவிட்டில் டோணி தனது எதிர்ப்பாளர்களுக்கு வித்தியாசமாக பதில் அளித்துள்ளதாக வீடியோ போடப்பட்டு இருக்கிறது. ஹல்க் எதிரியை போட்டு துவைப்பது போல டோணி தனது எதிரிகளை துவைத்து எடுத்துள்ளார் என்று சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications