For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட புகழ் சச்சின், கோலியை தாண்டி வேற லெவல்ல இருக்கு.. கவாஸ்கர் பெருமிதம்

அபுதாபி : இந்தியாவில் தோனியின் புகழ் சச்சின் மற்றும் கோலியை தாண்டி சென்றுள்ளதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தோனியை மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யூஏஇயில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனை செய்வதற்காக அங்கு சென்றுள்ள சுனில் கவாஸ்கர் இதை தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி

ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி

யூஏஇயில் நேற்று இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் துவங்கியுள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய நிலையில் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்று சென்னை ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஸ்பின்னர்களை பயன்படுத்திய தோனி

ஸ்பின்னர்களை பயன்படுத்திய தோனி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குறைவான பயிற்சி ஆட்டங்களையே மேற்கொண்டிருந்த சிஎஸ்கேவின் இந்த வெற்றி தோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த போட்டியில் அணியில் உள்ள ஸ்பின்னர்களை சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றியை உறுதிப் படுத்தியுள்ளார் தோனி.

சச்சின், கோலியை தாண்டியுள்ளது

சச்சின், கோலியை தாண்டியுள்ளது

இந்நிலையில் இந்தியாவில் தோனியின் புகழ் உச்சத்திற்கு சென்றுள்ளதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் ஐபிஎல் வர்ணனையை மேற்கொண்டுவரும் அவர், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேப்டன் கோலியை தாண்டி தோனியின் புகழ் உச்சத்தில உள்ளதாக கூறியுள்ளதார்.

தோனிக்கு அதிக ரசிகர்கள்

தோனிக்கு அதிக ரசிகர்கள்

சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொண்டால், மும்பை மற்றும் கொல்கத்தாவில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளதாகவும் இதேபோல கோலிக்கு டெல்லி மற்றும் பெங்களூருவில் அதிக ரசிகர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்ட கவாஸ்கர், ஆனால் தோனிக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, September 20, 2020, 13:14 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
Mahendra Singh Dhoni's popularity in India has exceeded the level of fandom -Gavaskar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+