WATCH: தோனியின் அந்த ஒரேயொரு ஸ்டெம்பிங்... அசுர வேகத்தில் மிரண்ட இலங்கை
Recommended Video
லீட்ஸ்: இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோனி ஸ்டம்பிங் செய்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் 44வது போட்டி லீட்சில் நடைபெற்றது. அதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இவ்விரு அணிகளும் மோதிக் கொள்ளும் கடைசி லீக் போட்டியாகும்.
முதலில் டாஸ் வென்ற இலங்கை, இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. இலங்கைக்கு துவக்க வீரர்களாக இறங்கிய கேப்டன் கருண ரத்னே மற்றும் பெரேரா இருவரும் மிகவும் தடுமாறினார்.

பும்ரா அபாரம்
பும்ராவின் 2வது ஓவரில் 10 ரன்கள் எடுத்து தோனியின் கேட்சில் வெளியேறினார் கருண ரத்னே. 20 ரன்கள் எடுத்து மற்றுமொரு துவக்க வீரர் பெரேரா, மறுபடியும் பும்ரா பந்தில் தோனி கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்
தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த ஜடேஜாவிற்கு இன்றைய போட்டியில் சாஹலுக்கு பதிலாக விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. பவர்பிளே முடிந்தவுடன் 11வது ஓவரை ஜடேஜா வீச வந்தார். இந்த உலகக்கோப்பையில் இது தான் இவருக்கு முதல் ஓவர் ஆகும்.
கேட்ச் வீடியோ
முதல் 3 பந்துகளை அடிக்க தடுமாறிய மெண்டிஸ் 4வது பந்தை இறங்கி அடிக்க முயற்சித்தார். பந்தை அவர் மிஸ் செய்ய, பின்னால் இருந்த தோனி எளிதாக ஸ்டம்பிங் செய்து அவரை வெளியேற்றினார். இப்போட்டியில் முதல் 3 விக்கெட்டுகளை தோனி கேட்ச் பிடித்து அவுட் செய்தார்.

265 ரன்கள் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்களும், திரிமன்னே 53 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையம், ஜடேஜா, பாண்டியா உள்ளிட்ட மற்ற பவுலர்கள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications