Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: இந்த விஷயத்துடன் கடைசி வரை போராடிய தல தோனி..! வெளி வராத உண்மை வீடியோ..!

லண்டன்: வலது கை கட்டை விரலில் பெரிய காயம் வைத்துக்கொண்டு இறுதி வரை தோனி போராடியது வீடியோ மற்றும் புகைப்படம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்றது. 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் என்று இருந்த நிலையில், தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இறுதிவரை போராடினர். ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Dhoni’s thumb injury photo leaked and fans praised his dedication

கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், 49 ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்சர் அடித்தார். அப்போது அனைவருக்கும் இந்தியாவிற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று உற்சாகம் அடைந்தனர். ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே, தோனி குப்தில் த்ரோவில் ரன் அவுட்டானார். இறுதியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்தியா வெளியேறியது.

போட்டி முடிந்த பின் வீரர்களுக்கு கை குலுக்கிய போது, தோனி மட்டும் தமது வலது கையை கீழே தொங்கவிட்டபடி இடது கையால் நியூசிலாந்து வீரர்களுக்கு கை குலுக்கினார். அதை பார்த்த ரசிகர்கள் தோனிக்கு என்னாயிற்று? என பல கேள்விகளை எழுப்பினர். இந்திய நிர்வாகத்திடம் இருந்து எந்த பதிலும் அற்கு சொல்லப்படவில்லை.

இந்நிலையில், ரசிகை ஒருவருடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டது. அதில் தோனியின் வலது கை கட்டை விரலின் காயம் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிய வந்திருக்கிறது. அந்த புகைப்படத்தை உற்று பார்க்கும் போது, எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தவான், விஜய் சங்கர் போன்றோர் சிறிய காயத்துக்கே தொடரைவிட்டு விலகினர். ஆனால், இவ்வளவு பெரிய காயம் இருந்தும், கடைசி வரை வெளியே சொல்லாமல் அணிக்காக போராடிய தோனியின் இந்த செயலால் மனம் உருகிய ரசிகர்கள், தல தோனிக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Saturday, July 13, 2019, 12:52 [IST]
Other articles published on Jul 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+