Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோடி ரூபாய்க்கு ஏலம் போன டோணியின் ‘பழைய கின்னஸ்’ பேட்... டெல்லி கண்காட்சியில்!

டெல்லி: 2011ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் டோணி சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்தபோது பயன்படுத்திய பேட் டெல்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டை வைத்துத்தான் இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார் கேப்டன் டோணி. எனவே இது மிகப் பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்த பேட் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி 1 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் மூலம் விற்பனையானது. தற்போது டெல்லி பெங்காலி மார்க்கெட்டில் இதை காட்சிக்கு வைத்துள்ளனர்.

தற்போது இதன் மதிப்பு ரூ. 1 கோடியாகும். இது விற்பனையானபோது லிம்கா புத்தகம் மற்றும் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது.

ஆட்டோகிராப்பும்...

ஆட்டோகிராப்பும்...

இந்தப் பேட்டை அமித் பக்சன்டல்கா என்பவர் ஏலம் மூலம் வாங்கினார். அந்தப் பேட்டில் டோணியின் ஆட்டோகிராப்பும் அடங்கியுள்ளது.

பரம விசிறி...

பரம விசிறி...

இதுகுறித்து அமித் கூறுகையில், நான் டோணியின் பரம விசிறி. இந்த பேட் எனது சொத்தாக இருக்கலாம். ஆனால் இது காலா காலத்திற்கு டோணியின் சொத்தாகும். அந்த சொத்தை பாதுகாப்பவர்களாக மட்டுமே நாங்கள் இருக்கிறோம்.

வரலாற்றை மாற்றிய டோணி...

வரலாற்றை மாற்றிய டோணி...

2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றது மிகப் பெரிய விஷயம். சிறு வயதிலிருந்தே நான் கபில்தேவ் கோப்பையை தாங்கிப் பிடிக்கும் படத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தேன். ஆனால் வரலாற்றை மாற்றியமைத்தவர் டோணி.

கோப்பை நமக்குத் தான்...

கோப்பை நமக்குத் தான்...

2015 உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நிச்சயம் டோணியின் பேட்டை நான் ஏலத்தில் எடுக்க விரும்புவேன். அதில் சந்தேகமே இல்லை. தற்போதைய அணியில் டோணியைப் போல 11 சூப்பர் ஹீரோக்கள் உள்ளதால் கோப்பை நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார் அமித்.

ஆஸி. பயணம்...

ஆஸி. பயணம்...

அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆதரித்துக் குரல் கொடுப்பதற்காக அமித் ஆஸ்திரேலியா செல்லவுள்ளாராம். டோணிக்காகவே இந்தப் பயணமாம். அரை இறுதிப் போட்டியில் இந்தியா நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என்றும் அமித் உறுதியாக நம்பகிறார்.

கடந்த உலகக் கோப்பையில்...

கடந்த உலகக் கோப்பையில்...

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது டோணி சிறப்பாக ஆடி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். கடைசியாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, March 23, 2015, 11:51 [IST]
Other articles published on Mar 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+