Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni: இதை பண்ணினோம்... ராஜஸ்தானை அடிச்சு தூக்கினோம்.. தோனி சொன்ன வெற்றி ரகசியம்

சென்னை: அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் தான் ராஜஸ்தான் அணியை வீழ்த்த முடிந்தது என்று தல தோனி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அந்த போட்டியில் தல தோனி 46 ரன்களில் 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்தார்.

இறுதி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் அந்த ரன்களே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுக்க காரணமாக அமைந்தது.

176 ரன்கள் குவிப்பு

176 ரன்கள் குவிப்பு

இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. முதல் 3 முக்கிய வீரர்கள் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

ஸ்டோக்ஸ் அதிரடி

ஸ்டோக்ஸ் அதிரடி

ஆனாலும், பின்வரிசையில் வந்த ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்களும், ராகுல் த்ரிபாதி 39 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 46 ரன்களும், ஜோப்ரா ஆர்சர் 24 ரன்களும் எடுத்து அணிக்கு கைகொடுத்தனர்.

இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை உருவானது. போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

சவால் நிறைந்தது

சவால் நிறைந்தது

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான வெற்றி குறித்து தோனி கூறியதாவது: போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும் என்பதை நாங்கள் முன்பே கணித்திருந்தோம். ஏன் என்றால் பிட்ச்சின் தன்மை மாறுபட்டு கொண்டே இருந்தது.

திணறிய பவுலர்கள்

திணறிய பவுலர்கள்

வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை வீச முடியாமல் திணறினர். ஒரு மாற்றம் தேவை என்பதற்காக சாண்ட்னரை களமிறக்கினோம்.ஒரு குழுவாக விளையாடும் பொழுது அனைவருக்கும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும்.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

ஜடேஜா மற்றும் சாண்ட்னர் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர்களால் இந்த மைதானத்தில் சரியாக பந்துவீச முடியவில்லை. அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றி தான் இது என்று கூறினார்.

Story first published: Monday, April 1, 2019, 10:32 [IST]
Other articles published on Apr 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+