Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளோடு சேர்ந்து 5வது திருமணநாளை சிறப்பாகக் கொண்டாடிய டோணி!

டெல்லி: இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் நேற்று தங்களது 5வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.

திருமண நாளையொட்டி குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்களின் வாழ்த்துகள் டோணி தம்பதிக்கு நேற்று குவிந்தன. சமூக வலைதளங்களில் பலரும் டோணி - சாக்ஷிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த ஐந்தாவது திருமண நாள் டோணி - சாக்ஷி தம்பதிக்கு விசேஷமானதாகும். காரணம், முதல் 4 திருமண நாட்களை தனித்துக் கொண்டாடிய அவர்கள் இந்த முறை தங்களது குட்டி மகள் ஜிவாவுடன் சேர்ந்து கொண்டாடியது விசேஷமானது.

காதல் திருமணம்...

காதல் திருமணம்...

2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி டேராடூனில் வைத்து சாக்ஷியை மணந்தார் டோணி. இந்தத் திருமணத்திற்கு இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

பள்ளிப் பருவ நண்பர்கள்...

பள்ளிப் பருவ நண்பர்கள்...

டோணியும் சரி, சாக்ஷியும் சரி பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இதன் மூலம் இருவரும் திருமண வாழ்க்கையிலும் இணைந்தனர்.

சாக்ஷி..

சாக்ஷி..

திருமணமானதற்குப் பின்னர் டோணிக்குப் பக்க பலமாக இருந்து வந்த சாக்ஷி, டோணி விளையாடும் போட்டிகளுக்குத் தவறாமல் வந்தார். குறிப்பாக டோணி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு அவர் வந்தது தனிச் செய்தியாக மீடியாக்களில் மாறியது நினைவிருக்கலாம்.

அழகிய பெண் குழந்தை...

அழகிய பெண் குழந்தை...

இந்த மகிழ்ச்சிகரமான தம்பதியின் வாழ்க்கையை மேலும் சுவாரஸ்யமாக்க அழகிய பெண் குழந்தை பிறந்தது. அப்போது டோணி உலகக் கோப்பைப் போட்டிக்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்தார்.

டோணியின் மகள்...

டோணியின் மகள்...

போட்டித் தொடர் முடியும் அவர் தனது மகளை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. கோப்பையுடன் திரும்பித்தான் அவர் மகளைப் பார்ப்பார் என அனைவரும் நினைத்னர். ஆனால் துரதிர்ஷ்டவமாக அது நடக்காமல் போய் விட்டது. இருப்பினும் மகளுடன் இணைந்து தனது மகிழ்ச்சியை கொண்டாடினார் டோணி.

திருமண நாள்...

இந்த நிலையில் நேற்று தங்களது செல்ல மகளுடன் சேர்ந்து திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர் டோணி - சாக்ஷி தம்பதியினர். இதையடுத்து பேஸ்புக், டிவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்திருந்தனர்.

இந்த வாழ்த்துகளுக்கு சாக்ஷி தனது டிவிட்டரில் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தார்.

Story first published: Sunday, July 5, 2015, 12:45 [IST]
Other articles published on Jul 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+