Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பா இங்க பாருங்க.. கத்திய ஸிவா.. வாயில்லா ஜீவனை காப்பாற்றிய தோனி.. செம ஹேப்பி!

ராஞ்சி : தோனி மயக்கத்தில் இருந்த ஒரு குட்டிப் பறவையை காப்பாற்றி உள்ளார்.

தோனியின் மகள் ஸிவா இது பற்றி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவரித்து இருக்கிறார். தோனி ரசிகர்கள் இந்த பதிவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன. தோனி அந்த பறவையை தன் கையில் வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல்-இல் தோனி

ஐபிஎல்-இல் தோனி

தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வமாக இருந்தார். எனினும், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் தள்ளி வைகப்பட்டுள்ளது. தோனி தற்போது லாக்டவுனை ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் கழித்து வருகிறார்.

அனுபவித்து வரும் தோனி

அனுபவித்து வரும் தோனி

தன் பண்ணை வீட்டில் மகளுடன் புல்லட் பயணம், வீடியோ கேம், புதிய பைக் அசெம்ப்ளி செய்வது என பொழுதை போக்கி வருகிறார். புதிதாக ஒரு டிராக்டர் கூட வாங்கி அதிலும் அவ்வப்போது வலம் வருகிறார் தோனி. லாக்டவுனை முழுவதுமாக அனுபவித்து வருகிறார்.

பறவை

பறவை

இந்த நிலையில் தான் காப்பர்ஸ்மித் என்ற பறவை மயங்கிக் கிடப்பதை கண்டுள்ளார் ஸிவா. பின்னர், அந்த பறவையை எடுத்து தோனி தண்ணீர் கொடுத்து, மயக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார். பின்னர் அந்த பறவை பறந்து சென்றுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இது பற்றி ஸிவா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் என்ன நடந்தது என விவரித்துள்ளார். "இன்று நடைபாதையில் ஒரு பறவை மயங்கிக் கிடப்பதை பார்த்தேன். உடனே அப்பா, அப்பாவை கத்தி அழைத்தேன்."

மகிழ்ச்சி அடைந்தோம்

மகிழ்ச்சி அடைந்தோம்

"அப்பா அந்த பறவையை தன் கையில் ஏந்தி, நீர் அருந்தச் செய்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பறவை கண் திறந்தது. நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். பின் அந்தப் பறவையை ஒரு கூடையில், இலைகளுடன் வைத்தோம்."

பறந்து சென்றது

பறந்து சென்றது

"இது கிரிம்சன் பிரெஸ்ட்டட் பார்பட், இதை காப்பர்ஸ்மித் என்றும் அழைப்பார்கள் என்று அம்மா கூறினார். என்ன ஒரு அழகான பறவை. திடீரென அது பறந்து சென்றது. அது இங்கேயே இருக்க வேண்டும் என நான் விரும்பினேன்."

மீண்டும் பார்ப்பேன்

மீண்டும் பார்ப்பேன்

"ஆனால், அம்மா அந்தப் பறவை தன் தாயிடம் சென்று இருக்கும் என்றார். நிச்சயம் அந்த பறவையை நான் மீண்டும் பார்ப்பேன் என நம்புகிறேன்" இப்படி எழுதி உள்ளார் ஸிவா. இந்த அழகான பதிவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

வைரல்

வைரல்

இன்ஸ்டாகிராமில் இந்த பதிவை பல லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். தோனி அந்த பறவையை ஏந்தி இருக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் கடினமான சூழல் நிலவும் இந்த நேரத்தில் இந்த நல்ல செயல் மனதுக்கு இதமாக அமைந்துள்ளது.

Story first published: Wednesday, June 10, 2020, 20:53 [IST]
Other articles published on Jun 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+