Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் கதையே முடிந்து இருக்கும்.. தோனிதான் காப்பாற்றினார்.. வெளியான சீக்ரெட்.. பரபர பின்னணி!

சிட்னி: இந்திய அணியில் தற்போது தலை சிறந்த வீரராக உருவெடுத்து இருக்கும் கேப்டன் கோலி.. ஒரு காலத்தில் இந்திய அணியில் இருந்தே நீக்கப்படும் நிலையில் இருந்தார். ஆனால் அப்போதைய கேப்டன் தோனிதான் கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் கோலி அடிக்கடி மாற்றங்களை செய்து வருகிறார் என்று புகார் உள்ளது. அடிக்கடி தேவையில்லாத மாற்றங்களை செய்கிறார், வீரர்களை நீக்குகிறார் என்று புகார் உள்ளது.

முக்கியமாக இந்திய அணியில் ஒரு வீரர் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றாலும் அவர்களை எளிதாக கோலி நீக்கிவிடுகிறார். வீரர்கள் மீது கோலி நம்பிக்கை வைப்பது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

நீக்கம்

நீக்கம்

கோலி இப்படி இருக்க கூடாது. அவர் தொடர்ந்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். வீரர்களை ஆதரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேப்டன் கோலி போல தோனியும் செயல்பட்டு இருந்தால் கோலிக்கு கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பே கிடைத்து இருக்காது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டுள்ளார். கோலி சொதப்பிய போதெல்லாம் அவருக்கும் வாய்ப்பு வழங்கியது தோனிதான் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் கூறியுள்ளார்.

பேட்டி

பேட்டி

இது குறித்து சஞ்சய் மஞ்சிரேக்கர் அளித்துள்ள பேட்டியில், 2011-12ல் நடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரிலேயே கோலியின் டெஸ்ட் வாழ்க்கை முடிந்து இருக்கும். அந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 0-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி வீரர்கள் இதில் மோசமாக ஆடினார்கள்.

கோலி எப்படி ஆடினார்

கோலி எப்படி ஆடினார்

இதில் ஒருநாள் தொடரில் கோலி நன்றாக ஆடினார். ஆனாலும் டெஸ்ட் தொடரில் மோசமாக சொதப்பினார். அந்த டெஸ்ட் தொடரில் கோலி 11, 2, 23, 9 என்று மோசமான ரன்களை எடுத்து இருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் கோலியை பாதியில் தூக்கவே அணி நிர்வாகம் முடிவு செய்தது. கோலி டெஸ்ட் தொடருக்கு செட்டாக மாட்டார் என்று பிசிசிஐ முடிவு செய்து இருந்தது.

கருத்து

கருத்து

ஆனால் தோனி கொடுத்த ஊக்கம் காரணமாக அவருக்கு வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே டெஸ்ட் போட்டிகளில் முழுமையான வீரராக கோலி உருவெடுக்க முடிந்தது. கோலிக்கு தோனி வழங்கிய வாய்ப்பை கோலி மற்ற வீரர்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் மற்ற வீரர்கள் தங்கள் பார்மை பெறுவார்கள் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 15, 2020, 16:25 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+