வேட்டி வரிஞ்சுக் கட்டு.. பாட்டைப் பொளந்து கட்டு... டோணியின் குத்தாட்டம்.. நம்ம ஊரு வண்டிக்காக!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாவிட்டால் என்ன.. ராஜாதி ராஜாவாக டோணி இன்னும் "சென்னையின் மைந்தராக"த்தான் இருக்கிறார்... இதோ இந்த வீடியோ அதற்கு சாட்சி.
பிரபுதேவாவுடன் சேர்ந்து டோணி போட்ட அட்டகாசமான டான்ஸ்தான் இப்போது டாக் ஆப் தி நேஷன்.. இதில் வேட்டி கட்டி அச்சு அசல் தமிழ்ப் பையனாக மாறி நிற்கிறார் டோணி.. என்ன கலக்கல் சரவணன் இது என்று ஆச்சரியப்பட்டுச் சொல்லத் தோன்றுகிறது இந்த வீடியோவையும், அதில் டோணி ஆடிய ஆட்டத்தையும் பார்க்கும்போது.
மோட்டார் சைக்கிள் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது இந்த நடனக் காட்சி. பிரபுதேவாவும், டோணியும் இணைந்து இதில் அசத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் டோணி
டோணி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியுடனான ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போருக்காக தனது படை பரிவாரத்துடன் போயுள்ளார்.

பிரபுதேவாவுடன் டான்ஸ்
அதற்கு முன்பாக இந்த விளம்பரத்தில் நடித்துக் கொடுத்துள்ளார் டோணி. அவருடன் இணைந்து ஆட்டம் போட்டிருக்கிறார் பிரபுதேவா. இருவரும் வேட்டியில் கலக்கியுள்ளனர்.

பொங்கல் பரிசு
இப்படி டோணி டான்ஸ் ஆடி யாரும் பார்த்ததில்லை. அதுவும் வேட்டியில் இப்படிப் பட்டையைக் கிளப்பி டோணியே கூட பார்த்ததில்லை என்பதால் தமிழக மக்களுக்கு இது பொங்கல் பரிசு போல அமைந்து விட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் என்பதால்
தற்போது தடை செய்யப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற அடிப்படையில் இந்த விளம்பரத்திற்கு டோணியை இந்த கோலத்தில் தேர்வு செய்தனராம்.
ச்சும்மா சொல்லக் கூடாது.. செம குத்து மச்சி!


Click it and Unblock the Notifications