Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் அவுட்டா? அதெல்லாம் ஒத்துக்க முடியாது.. காமெடி பண்ணிய பேட்ஸ்மேன்.. தோனி வெளியிட்ட வைரல் வீடியோ!

Recommended Video

காமெடி பண்ணிய பேட்ஸ்மேன்.. இன்ஸ்டாகிராமில் தோனி வெளியிட்ட வைரல் வீடியோ!

மும்பை : மூத்த வீரர் தோனி இன்ஸ்டாகிராமில் தெருவில் சிலர் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் நகைச்சுவையான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பள்ளிக்கூட நாட்களில் தெருவில் கிரிக்கெட் ஆடும் போது நம்ப முடியாத வகையில் நடக்கும் சில சம்பவங்களை நினைவு கூர்ந்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் தோனி.

த்ரோபேக் பதிவு

த்ரோபேக் பதிவு

பலரும் தங்கள் இளமை கால புகைப்படங்களை வெளியிட்டு, "த்ரோபேக்" என்ற ஹேஸ்டேக்கில் வெளியிட்டு வரும் நிலையில் தோனி இந்த கிரிக்கெட் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதில் தோனி இடம் பெறவில்லை.

என்ன வீடியோ?

என்ன வீடியோ?

அந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கும் காட்சியில் ஒரு பேட்ஸ்மேன் முதல் பந்திலேயே பவுல்டு அவுட் ஆகி விடுகிறார். சுற்றி இருப்பவர்கள் அவுட் என கொண்டாடும் போது அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை.

ட்ரையல் பால்

அவர் தான் இன்னும் தயார் ஆகவில்லை. இது ட்ரையல் பால் தானே என்று சமாளித்து மீண்டும் பேட்டிங் ஆடுகிறார். சரி, அடுத்து சிக்ஸ் அடிக்கப் போகிறார் என்று பார்த்தால், அடுத்து வீசப்படும் பந்திலேயே மீண்டும் பவுல்டு அவுட் ஆகி வெளியேறினார்.

தோனி பதிவு

தோனி பதிவு

இந்த வீடியோவை வெளியிட்ட தோனி, இந்த வீடியோ மோசமான வெளிச்சத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். ஆனால், இதில் உள்ள நகைச்சுவை ட்ரையல் பால், அம்பயர் தீர்ப்பு தான் இறுதி என்பது தான். நம் பள்ளிக் கூட நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது" என்று கூறி உள்ளார்.

தோனி விடுப்பு

தோனி விடுப்பு

தோனி தற்போது கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு ஒதுங்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. அடுத்து நடக்க உள்ள வங்கதேச கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

Story first published: Wednesday, September 25, 2019, 16:22 [IST]
Other articles published on Sep 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+