Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகள் ஜிவாவை வகை, வகையாக போட்டோ எடுத்து வெளியிட்ட டோணி

டெல்லி: கூல் கேப்டன் டோணி தனது செல்ல மகள் ஜிவாவின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கடந்த பிப்ரவரி மாதம் சாக்ஷி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஜிவா என்று பெயர் வைக்கப்பட்ட குழந்தையை பார்க்க டோணி உடனே இந்தியாவுக்கு வரவில்லை. மாறாக உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகே நாடு திரும்பி மகளை பார்த்தார்.

நாட்டுக்கு விளையாடுவது தான் தனக்கு முக்கியம் என்று டோணி தெரிவித்திருந்தார்.

ஜிவா

ஜிவா

ஐபிஎல் போட்டிகளின்போது சாக்ஷி டோணி தங்கள் மகள் ஜிவாவை ஸ்டேடியத்திற்கு தூக்கி வந்ததை பார்க்க முடிந்தது. ஜிவா டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளின்போது ஸ்டேடியத்திற்கு வந்தார்.

டோணி

டோணி

டோணி தனது செல்ல மகள் ஜிவாவின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு பலர் ஜிவா மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை

வாழ்க்கை

ஜிவா பிறந்த பிறகு தனது வாழ்க்கை மாறிவிட்டதாகவும். குழந்தையின் சிரிப்பை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டோணி அண்மையில் கூறியிருந்தார்.

அழுகை

அழுகை

நான் சென்னை அணிக்கு விளையாடுகிறேனா அல்லது இந்திய அணிக்கு விளையாடுகிறேனா என்பது எல்லாம் ஜிவாவுக்கு முக்கியம் இல்லை. அவளுக்கு அழுக வேண்டும் அவ்வளவு தான் என்றார் டோணி.

மகள்

மகள்

வங்கதேசத்திற்கு செல்ல டோணி ஜிவாவுக்கு அண்மையில் பாஸ்போர்ட் வாங்கினார். பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மிகவும் உதவியாக இருந்ததாக அவர் கூறினார்.

Story first published: Friday, June 12, 2015, 11:08 [IST]
Other articles published on Jun 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+