மீண்டும் ஓரணியில் டோணி, ஷேவாக் - மெக்கலம், லாரா அணிக்கு எதிராக மோதுகிறார்கள்
லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி போரில் காயமடைந்த பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக கண்காட்சி டுவென்டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இதில் 'Help for Heros 11' மற்றும் ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இரு அணிகள் சார்பாகவும் புகழ்பெற்ற பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் விளையாடவிருக்கின்றனர்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் தலைமையிலான அணியில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டுவென்டி ஓவர் கேப்டனான டோணி, வீரேந்திர ஷேவாக், சாஹித் அப்ரிடி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
அதேபோல பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான இதர உலக 11 அணிக்காக மாத்யூ ஹைடன், பிரையன் லாரா, டேனியல் வெட்டோரி ஆகியோர் விளையாடவிருக்கின்றனர். இந்த அணியின் பயிற்சியாராக கேரி கேர்ஸ்டனும், அணி மேலாளராக சுனில் கவாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான 'பார்ம்' காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷெவாக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து டோணியுடன் ஒரே அணியில் விளையாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications