Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் அசத்தல் கோல், கோஹ்லி அணிக்கு வெற்றி

மும்பை: தலைப்பில் ஏதோ பிழை இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். விளையாட்டு வீரர்கள் அடங்கிய விராட் கோஹ்லி தலைமையிலான ஆல் ஹார்ட் கால்பந்து அணிக்கும், சினிமா நட்சத்திரங்கள் அடங்கிய ஆல் ஸ்டார் கால்பந்து அணிக்கும் இடையேயான காட்சி போட்டியில் கேப்டன் கூல் மகேந்திர சிங் அடித்த இரண்டு கோல்கள், அனைவரையும் மெர்சலாக்கியது.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, இந்த காட்சி கால்பந்து போட்டி மூன்றாவது ஆண்டாக நேற்று நடந்தது.

Dhoni shines


இதில் ஆல் ஹார்ட் அணி, 7-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி இரண்டு கோல்களை அடித்து மேன் ஆப் த மேட்ச் பரிசை வென்றார். போட்டியின் முதல் கோலை அடித்தார்.

இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம் ஸ்டைலில் பிரீ கிக் அடித்து, டோணி கோலடித்தது, அணியின் கோச்சான இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உள்ளிட்டோருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இரண்டாவது கோல் அடித்தும், எங்கள் தல டோணிக்கு விசில் போடு என்று மைதானத்தில் விசில் பறந்தது.
Dhoni shines


22 பேர் மைதானத்தில் இருந்தாலும், தல மட்டும் தனியாக தெரிந்தார். அவர் பந்தைக் கடத்தித் தருவது என்று கால்பந்து வீரராகவே மாறிவிட்டார். ஆர்சனல் உள்ளிட்ட கால்பந்து அணிகளுக்கு நல்ல வீரர் கிடைத்து விட்டார் என்பதுதான் டுவிட்டரின் தற்போது ஹிட்.

டோணியைத் தவிர விராட் கோஹ்லி, ஷிகார் தவன், அனிருத்தா ஸ்ரீகாந்த், மனீஷ் பாண்டே ஆகியோர் கோலடித்தனர். அபிஷேக் பச்சன் தலைமையிலான ஆல் ஸ்டார் அணியில் ரன்பீர் கபூர், ஷபீர் அலுவாலியா, ஆதர் ஜெயின் ஆகியோர் கோலடித்தனர்.
Story first published: Monday, October 16, 2017, 13:24 [IST]
Other articles published on Oct 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+