டெல்லி: அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் டோணி நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் ஷேவாக் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஷேவாக் இவ்வாறு பதிலளித்தார்.
டோணி தற்போதைய நிலையில் ஓய்வு பெற்றால், கீழ்வரிசை பேட்டிங் சீர்குலைந்துவிடும் என்றும் ஷேவாக் தெரிவித்தார்.

ஷேவாக் கூறியதாவது: அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் டோணி நீடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், இந்தியாவை நல்லதொரு உலகக்கோப்பை அணியாக மாற்ற முடியும். டோணி தற்போதைய நிலையில் ஓய்வு பெற்றால் ஐந்தாவது, ஆறாவது அல்லது 7வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பதில் சிக்கல் எழும்.
டோணி இருக்கும் போதே அந்த பேட்டிங் வரிசைகளுக்கு யாரை களம் இறக்குவது என்ற பிரச்சினை உள்ளது. டோணி இல்லையெனில் அந்த பேட்டிங் வரிசை நிரப்பப்படாத நிலையில்தான் இருக்கும். கடைசி கட்டத்தில் களமிறங்கி, டோணியை போல மற்றொருவர் ஆட்டத்தை வெற்றி பெற்று தருவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு ஷேவாக் கூறினார்.