மெஸ்சிக்கே சவால்விடும் டோணி.. கால் பந்தாட்டத்திலும் தாறுமாறு செய்த 'தல'!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியும், பாலிவுட் நடிகர்கள் அணியும் மோதும் கால்பந்து போட்டி நேற்று மும்பையில் நடை பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோஹ்லி தலைமையிலும், பாலிவுட் அணி ரன்பீர் கப்பூர் தலைமையிலும் இந்தக் கால்பந்து போட்டியில் மோதின.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் குழு 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் கோஹ்லி, விரைவில் கால்பந்து உலகக் கோப்பையிலும் விளையாடுவார் என ஜாலியாக நெட்டிசன்களால் பேசப்படுகிறது.

பாலிவுட் vs இந்திய அணி மோதல்
ஆல் ஸ்டார்ஸ் எப்.சி என்றழைக்கப்படும் பாலிவுட் நடிகர்களின் கால்பந்து அணியும், ஆல் ஹார்ட்ஸ் எப்.சி என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் கால்பந்து அணியும் சென்ற வருடத்தில் தொண்டு செயல்பாடுகளுக்கு பணம் திரட்டுவதற்காக கால் பந்து போட்டியில் விளையாடின. இவர்கள் விளையாடிய இந்தப் போட்டி அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அதேபோல் ஒருவருடம் கழித்து மீண்டும் இரு அணிகளும் நேற்று மும்பை மைதானத்தில் மோதிக் கொண்டன.

தொண்டுச் செயல்பாடுக்கான போட்டி
சென்ற ஆண்டு அபிஷேக் பச்சன் - டோணி தலைமையில் ஆடப்பட்ட இந்த போட்டியில் வந்த வசூல் மூலம் பல நல்ல காரியங்கள் செய்யப்பட்டன. அதேபோல் இந்த முறையும் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இந்த முறை பாலிவுட் டீமுக்கு ரன்பீர் கப்பூர் தலைவராகி பொறுப்பு ஏற்று விளையாடினார். இந்திய அணியின் தலைவராக கோஹ்லி செயல்பட்டார். இந்த போட்டியில் விற்கப்படும் டிக்கெட்டுகள் மூலமாக வரும் அனைத்து பணமும் அப்படியே சமூக சேவை செயல்பாடுகளுக்காக செல்லும் என கூறப்பட்டுள்ளது.

போட்டியில் யார் பெற்றது
நேற்று மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ஹார்ட்ஸ் எப்.சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. கிரிக்கெட் போட்டிகளில் கெத்து காட்டும் பாய்ஸ் இந்த கால்பந்து போட்டியிலும் மாஸ் காட்டினார். மிகவும் சிறப்பாக விளையாடியதால் கிரிக்கெட் வீரர்களின் ஆல் ஹார்ட்ஸ் எப்.சி 7-3 என்ற கணக்கில் ஆல் ஸ்டார்ஸ் எப்.சி அணியை மிக எளிதாக தோற்கடித்தது. இந்த போட்டியில் தோணி மிகவும் சிறப்பாக விளையாடினார்.
கால்பந்து விளையாட போகும் டோணி
இந்த நிலையில் டோணியின் சிறப்பான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர் 2019ல் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடாமல் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடப் போகிறார் என தெரிவிக்கிறார்கள். மேலும் அவரை புகழ்பெற்ற அர்செனல் கால்பந்து குழு அணியில் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இவர் அடித்த இரண்டு கோல்களும் நேற்று இணையம் முழுக்க வைரல் ஆனது. டோணி, கிரிக்கெட் ஆட வரும் முன்பாக, கால்பந்து ஆடிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications