Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை வரை தோனி ஆடணும்.. அப்புறமா ரிஷப் பண்ட் ஆடலாம்.. கணக்கு போடும் சேவாக்

மும்பை : கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் பல புதிய வீரர்கள் அணிவகுத்து வருகிறார்கள். வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் சுழற்சி முறையில் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தோனிக்கு வயதும் ஏறி வருகிறது. அவர் ஒரு போட்டியில் ஆடவில்லை என்றால் கூட அணியில் அவரது இடம் பற்றிய பேச்சுக்கள் கிளம்பி வருகிறது.

எனினும், அவரது அனுபவம், தலைமைப் பண்பு இந்திய அணியில் வேறு யாருக்கும் இல்லை என்பதே உண்மை. அவர் உலகக்கோப்பை அணியில் ஆட வேண்டும் என ரசிகர்கள் நினைத்து வரும் வேளையில், ரிஷப் பண்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வளர்ச்சி பற்றிய விவாதம் எழுந்துள்ளது. சேவாக் இதை பற்றி தன் கருத்தை கூறி இருக்கிறார்.

தோனி பற்றி சேவாக்

தோனி பற்றி சேவாக்

டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சேவாக், ரிஷப் பண்ட், தோனி பற்றிய ஒப்பீட்டின் போது சில விஷயங்களை கூறினார். "என் கருத்தின் படி தோனி 2019 உலகக்கோப்பை வரை ஆட வேண்டும். ரிஷப் பண்ட்-ஐ இப்போது ஒருநாள் போட்டிகளில் ஆட வைத்தாலும் உலகக்கோப்பைக்கு முன் அவரால் 15-16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட முடியும். தோனியின் 300 போட்டிகள் அனுபவத்தை பார்க்கும்போது இது மிகவும் குறைவு. எனவே, தோனி உலகக்கோப்பை வரை ஆட வேண்டும்" என கூறினார்.

பண்ட் - தோனி ஒப்பீடு

பண்ட் - தோனி ஒப்பீடு

சேவாக் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். "ரிஷப் பண்ட் தன் எண்ணம் போல சிக்ஸ் அடிக்கக் கூடியவர். ஆனால், தோனி தனியாக நின்று போட்டிகளை வென்று கொடுத்தவர். எனவே, பண்ட் தோனியின் அடுத்த வாரிசாக இருக்க சரியானவர். தோனி ஓய்வு பெறும் போது தன் பதவியை ரிஷப் பண்ட்டிடம் விட்டுச் செல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்" என கூறியுள்ளார் சேவாக்.

ரிஷப் பண்ட் வாய்ப்பு உண்டா?

ரிஷப் பண்ட் வாய்ப்பு உண்டா?

ரிஷப் பண்ட்-க்கு இப்போது வரை டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அதில் ஒரு சதம் அடித்து விட்டதால் டெஸ்டில் அவரது வாய்ப்பு ஓரளவு உறுதியாகி உள்ளது. எனினும், ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருநாள் போட்டிகளில் அவர் இடம் பிடித்தாலும் களத்தில் ஆடும் அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

தோனியின் இடம் உறுதியா?

தோனியின் இடம் உறுதியா?

தோனியின் இடம் பற்றி இதுவரை தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ மத்தியில் எந்த பேச்சும் வரவில்லை. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது இடம் உறுதியாகவே உள்ளது. எனினும், அவர் தேவையான சமயங்களில் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதுள்ள எதிர்பார்ப்பு.

Story first published: Friday, September 14, 2018, 14:34 [IST]
Other articles published on Sep 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+