பாகிஸ்தான் போட்டிக்கு ரெடியாக வேண்டாமா? அதான் தோனி சீக்கிரம் அவுட் ஆயிட்டார்
மும்பை : ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியா, ஹாங்காங் இடையிலான போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா தடுமாறி தான் வெற்றி பெற்றது.
இந்திய அணி ஒரு கத்துக்குட்டி அணிக்கு எதிராகவே இப்படி தடுமாறியதை கண்டு ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர். இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி வேறு உள்ளது.
நேற்று இந்தியாவில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினார். அவரை ட்விட்டரில் ஒரு சிலர் விமர்சித்தும், ஒரு சிலர் அவர் அடுத்த போட்டியில் அடிப்பார் என ஆறுதல் கூறியும் வருகின்றனர்.
அழுத்தம் கொடுங்க
"தேர்வாளர்கள் தோனிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆசிய கோப்பையில் அவர் சரியாக ஆடவில்லை என்றால் அவரை நீக்கி விடுவோம் என கூற வேண்டும். கடந்த கால சிறப்புகளை வைத்து அவர் இந்திய கிரிக்கெட்டை பின்னே இழுத்து செல்லக் கூடாது" என காட்டமாக கூறியுள்ளார் இவர்.
அதுக்கு டக்-கே பரவாயில்லை..
"ஒரு பலவீனமான அணிக்கு எதிராக அவர் டக் அவுட் ஆனது ஓகே தான். நாளைக்கு பாகிஸ்தான் போட்டியில் டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆடாம பாத்துக்கணும்" என தோனி சில சமயம் பொறுமையாக ரன் சேர்ப்பதை நக்கலாக கூறியுள்ளார்.
பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகிறார்
நேற்று தோனி விரைவாக 3 பந்தில் ஆட்டமிழந்தார். இதை வைத்து, அவர் அடுத்த பெரிய போட்டியான பாகிஸ்தான் போட்டி இடைவெளி இல்லாமல் அடுத்த நாளே நடப்பதால் அதற்கு தயாராக வேண்டி ஆட்டமிழந்துள்ளார். இது ஒரு அருமையான யோசனை என அவரை கலாய்த்து வருகிறார்கள்.
நாளைக்கு சப்போர்ட் பண்ணனும்
"இன்று தோனியை கிண்டல் செய்பவர்கள் எல்லோரும் நாளை அவரை ஆதரிக்க வேண்டி வரும். அமைதியாக இருங்கள். அவர் பலத்தோடு மீண்டும் வருவார்" என ஆதரவு குரல் எழுப்பியுள்ளார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications