
யார் இந்த பீட்டர் வெல்லிங்ஸ்?
பீட்டர் வெல்லிங்ஸ்.. எங்கேயும் கேள்விப்படாத பெயராக இருக்கே.. என்கிறீர்களா? இவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் ஆடி அங்கே இருந்து நேராக பயிற்சியாளராக மாறியவர். சுமார் 30 ஆண்டுகள் பீல்டிங் பயிற்சி அளித்த அனுபவம் கொண்டவர்.

12 நாடுகளில் பயிற்சி
12 நாடுகளில் பல்வேறு அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். அந்த நாடுகளில் சில இந்தியா, அமெரிக்கா, ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, உகாண்டா, ருவாண்டா, கனடா மற்றும் இங்கிலாந்து. இவர் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மூன்றாம் நிலை பயிற்சியாளர் தகுதி பெற்றவர்.

இந்தியா வந்தார்
இவர் வெறும் 6 உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடியவர் என்பது ஆச்சரியமான விஷயம். ஏழு மாதங்கள் முன்பு வெல்லிங்ஸ் இந்தியாவில் குழந்தைகளுக்கு ஐந்து நாள் சிறப்பு கிரிக்கெட் பயிற்சி அளித்தார். அந்த ஆறு வயது குழந்தைகள் களத்தில் துடிப்பாக இருந்ததை கண்டு மீண்டும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க அந்த குறிப்பட்ட பயிற்சி அகாடமியிடம் ஒப்புதல் கூறி உள்ளார்.

சிறந்த முன்னுதாராணம்
அந்த குழந்தைகள் இத்தனை சிறிய வயதிலேயே துடிப்பாக கிரிக்கெட் களத்தில் செயல்பட முக்கிய காரணம், அவர்கள் முன்னுதாராணமாக எடுத்துக் கொண்டவர்கள் தான் எனக் கூறுகிறார் பீட்டர் வெல்லிங்ஸ். இதற்கு காரணம், தோனி மற்றும் விராட் கோலி தான் என்கிறார் அவர்.

பீல்டிங்கை மாற்றியவர்கள்
குறிப்பாக இந்திய அணியின் பீல்டிங்கை மாற்றியவர்கள் தோனி மற்றும் விராட் கோலி தான் எனக் கூறினார். இந்திய கிரிக்கெட்டில் பீல்டிங் புரட்சியை துவங்கி வைத்தவர் தோனி தான் என்றார். 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் 2 - 1 என டெஸ்ட் தொடரை வென்றது.

தோனி எடுத்த முடிவு
அந்த தொடரில் இங்கிலாந்து அணி இந்தியாவை விட பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணியில் சில வீரர்கள் காலால் பந்தை நிறுத்தியது உள்ளிட்ட சம்பவங்களை பார்த்து அதை மாற்றும் முடிவுக்கு வந்தார் தோனி. இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என தோனி தான் முதலில் முடிவு செய்தார் என்றார்.

கோலி அதிரடி
அதன் பின் விராட் கோலி அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். அவர் ஒரு முக்கிய செய்தியை கூறினார். "நாம் உடற்தகுதியுடன் இருக்கப் போகிறோம். நான் முதலில் அதை செய்வேன். நீங்கள் என் அணியில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் களத்தில் உறுதியாக இருக்க வேண்டும். என்றார் கோலி.

இந்தியாவில் சிறந்த வீரர்கள்
அதனால், உடனடியாக இந்தியாவுக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசும் 10 வீரர்கள் கிடைத்து விட்டார்கள். இந்தியா எத்தனை பலமாக மாறி உள்ளது என பாருங்கள். சிறந்த வைட் பால் பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த வைட் பால் பவுலர் இந்தியாவில் உள்ளனர் என்றார்.

சிறந்த பீல்டர் ஜடேஜா
விராட் கோலி, பும்ராவைத்தான் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் என குறிப்பிடுகிறார். மேலும், சிறந்த பீல்டரான ரவீந்திர ஜடேஜாவும் இங்கே இருக்கிறார். உலகில் தற்போது ஜடேஜாவும், பென் ஸ்டோக்ஸ்-உம் தான் சிறந்த பீல்டர்கள் என்றார் பீட்டர் வெல்லிங்ஸ்.


Click it and Unblock the Notifications