Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி எல்லையில் யாரும் நுழைய முடியாது... ஆரம்பிச்சாச்சு தல தோனிக்கு ராணுவத்தில் டிரெய்னிங்..!!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, வரும் 31ம் தேதி முதல் காஷ்மீர் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்து உள்ளது.

2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக தோனி இருந்து வருகிறார். அதனால் அவர் ராணுவத்தினருடன் சேர்ந்து, அவ்வப் போது கலந்துரையாடுவதுடன், பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

உலக கோப்பை தொடரில் விளையாடிய தோனி, அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவத்தில் தங்கி பயிற்சி பெற போவதாக அறிவித்திருந்தார். அதற்காக பாராசூட் ரெஜிமெண்டலில் தங்கி பயிற்சி பெற அனுமதி கோரியிருந்தார்.

தரைப் படை

தரைப் படை

அதனை பரிசீலித்த ராணுவ தளபதி பிபின் ராவத், தோனியை 106வது தரைப் படைப் பிரிவில் இணைத்துக் கொள்வதாக தெரிவித்தார். எனினும் அவர் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப் படமாட்டார் என்று க் கூறப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதி

வரும் 31-ம் தேதி

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட்டுடன், தோனி இணைந்தார். அங்கு அவர் 2 மாத ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினருடன் சேர்ந்து ரோந்து பணியில் தோனி ஈடுபட உள்ளார்.

உற்சாகத்தில் ரசிகர்கள்

உற்சாகத்தில் ரசிகர்கள்

மேலும் வீரர்களுடன் இணைந்து தங்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சகாத்தில் உள்ளனர். ராணுவ பயிற்சிக்காக அவர் பிசிசிஐயிடம் 2 மாத ஓய்வு கேட்டார்.

பன்ட் கீப்பர்

பன்ட் கீப்பர்

அதன்படி ஆகஸ்ட்டில் தொடங்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக பன்ட் முழு நேர விக்கெட் கீப்பராக வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறார்.

Story first published: Friday, July 26, 2019, 12:17 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+