Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னம்மா டோணி.. இப்படி பண்றீங்களேம்மா!

பெங்களூரு: விஜய் ஹஸாரே ஒரு நாள் போட்டித் தொடரில் கலந்து கொண்டு ஜார்க்கண்ட் அணிக்காக ஆடிய டோணி, ஒரு போட்டியில் கூட அரை சதம் போடாமல் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

இதுவரை ஜார்க்கண்ட் அணி 4 போட்டிகளில் ஆடியது. இதில் ஒரு போட்டியில் கூட டோணியால் அரை சதம் போட முடியவில்லை. அதை விட சாதாரண பந்து வீச்சாளர்களிடம் கூட அவர் தடுமாறி வருகிறார்.

நேற்று பாருங்கள், கேரள அணியுடன் மோதியபோது 20 வயதேயான இளம் பந்து வீச்சாளர் பபித் அகமது என்ற ஸ்பின்னரிடம் அவுட்டாகிப் போனார்.

Dhoni still yearns for a half century in VH series

இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனான டோணி விஜய் ஹஸாரே தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக ஆடி வருகிறார். 8 வருடங்களுக்குப் பிறகு விஜய் ஹஸாரே தொடரில் ஆடி வருகிறார் டோணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஜார்க்கண்ட் அணி 4 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் கூட அரை சதம் போடவில்லை டோணி. இருப்பினும் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ளது ஜார்க்கண்ட்.

முதல் போட்டியில் டோணி 9 ரன் எடுத்தார். 2வது போட்டியில் 44 ரன்கள் எடுத்தார். நேற்று நடந்த கேரளாவுக்கு எதிரான போட்டியில் 18 ரன்களை மட்டுமே எடுத்தார். இன்று நடந்த ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு பேட் செய்யும் வாய்ப்பே வரவில்லை.

Story first published: Monday, December 14, 2015, 17:13 [IST]
Other articles published on Dec 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+